சென்னையின் நினைவுகள்! மறக்க முடியாத சென்னை பயணம்! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ந்து வெளியிட்ட வீடியோ!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்து விட்டு திரும்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சென்னை பயணம் மறக்க முடியாததாக இருந்ததாக வீடியோவினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார்.
நேற்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு விமான நிலையம் மட்டும் அவர் சென்ற வழிகளில் உற்சாக வரவேற்வு கொடுக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட்
தொடர்ந்து நேரு உள்விளையாட்டரங்கில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. விழாவின் தொடக்கமாக வண்ண விளக்குகள் ஜொலிக்க பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் களிப்படைய செய்தது. அதன் இடையே, போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்.

பிரதமர் நரேந்திரமோடி
பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமல்லபுரம் கடற்கரை கோவில் போன்ற சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். அடுத்து நடிகர் கமல்ஹாசனின் குரல் பின்னணியில், தமிழரின் பெருமை குறித்த வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்றது. அதை பிரதமர் நரேந்திரமோடி ரசித்து பார்த்தார்.

முதல்வர் ஸ்டாலின்
பின்னர் சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர், இன்று காலை சென்னை அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதங்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ட்விட்டரில் வீடியோ
பின்னர் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி மீண்டும் அகமாதபாத் திரும்பி சென்றார். அவரை தமிழக அரசு சார்பில் முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது சென்னை பயணம் மறக்க முடியாததாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications