3,093 தமிழக மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை தரும் மத்திய அரசு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: PM-YASASVI | இளம் சாதனையாளர்களுக்கு மத்திய அரசு 1.25லட்சம் வரை உதவி தொகை வழங்குகிறது.இந்த உதவி தொகையை பெற நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். நுழைவு தேர்வில்வெற்றி பெற்றால் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
எழுத்து தேர்வு: இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு கிடைக்கும் : நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு 2023-24-ம் நிதியாண்டில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தமிழகத்தைச் சார்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
தகுதி என்ன: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in/frontend/web/schoollists/index என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பினை நீங்கள் படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
எவ்வளவு கிடைக்கும்: நீங்கள் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசு.
யாருக்கு கிடைக்கும்": பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை தேசியத் தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு நடத்தப்படும் YASASVI தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.
எழுத்து தேர்வு : YASASVI நுழைவுத் தேர்வு (OMR அடிப்படையில்) செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ளது. உங்கள் விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் அறியலாம்.












Click it and Unblock the Notifications