மோகன் ஜி குண்டு வைத்தாரா? கொலை செய்தாரா? ஏன் இப்படி? பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்! Exclusive
சென்னை: பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்ததாக கேள்விப்பட்டேன் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பிய இயக்குநர் மோகன் ஜி இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், போலீசாரின் அத்துமீறல் கண்டிக்கத்தது எனக் கூறியுள்ளார் பாமக வழக்கறிஞர் பாலு. நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், "மோகன் ஜி என்ன கொலை செய்தாரா? குண்டு வைத்தாரா? காரணமே சொல்லாமல் கைது நடவடிக்கை ஏன்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார் பாலு.
இயக்குநர் மோகன் ஜி, சென்னை காசிமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது வழக்கம். அந்தவகையில் அண்மையில் பேசிய ஒரு விஷயத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதி லட்டு - மாட்டுக் கொழுப்பு விவகாரம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என ஆய்விலும் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் மோகன் ஜி பேட்டியில் சொன்ன விஷயம்: இதுதொடர்பாக தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, "நாம் பெரிதாக பார்க்கும் ஒரு கோவிலில், பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரகள் கலக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக நான் செவி வழியாக கேள்விப்படிருக்கிறேன். இதுகுறித்த செய்தியே வெளியே வராமல், வேறு ஒரு காரணத்தைகூறி மொத்த பஞ்சாமிர்தத்தையே அழித்துவிட்டதாககூட நான் கேள்வி பட்டிருக்கிறேன்" எனக் கூறினார்.
அங்கே பணி புரிபவர்கள், சுற்றி இருப்பவர்கள் என்னிடத்தில் அந்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்கள்" என்று தெரிவித்திருந்தார் இயக்குநர் மோகன் ஜி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
பாமக வழக்கறிஞர் பாபு ஆவேசம்: இந்த நிலையில் தான் இது தொடர்பாக இன்று போலீசார் இயக்குநர் மோகன் ஜி-யை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக நமது ஒன் இந்தியா சார்பில் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் தொலைபேசி வாயிலாக கேட்கப்பட்டது. அப்போது, மோகன் ஜி மீதான போலீசாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
பாமக வழக்கறிஞர் பாலு பேசுகையில், "இன்று காலையில் இயக்குநர் மோகனை காவல்துறை சீருடையில் இல்லாதவர்கள் கைது செய்ததாக அவரது மனைவி சொன்னார். எந்த வழக்குக்காக எந்த போலீசார் கைது செய்தார்கள் என்பதை அறிந்துகொள்ள கடுமையாக முயற்சி செய்தேன். முக்கியமான காவல்துறை அதிகாரிகளை விசாரித்தும் காரணத்தை அறிய முடியவில்லை.
மோகன் ஜி குண்டு வைத்தாரா?: கடைசியாக பழனி பஞ்சாமிர்தம் குறித்துப் பேசியதற்காக இயக்குநர் மோகனை திருச்சி போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் ஒருவரை வழக்கில் கைது செய்வது அவர்களின் உரிமை. ஆனால், எந்த வழக்கில் எதற்காக கைது செய்கிறோம் என்ற தகவலை கைது செய்யப்படுபவரின் நெருங்கிய உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மோகன் என்ன மிகப்பெரிய கொலை குற்றம் செய்துவிட்டாரா? அல்லது குண்டு வைத்தாரா? பஞ்சாமிர்தத்தில் கலப்படம் இருப்பதாக பேசியதாகச் சொல்கிறார்கள். அவர் பேசியது குற்ற நடவடிக்கைக்கு உகந்ததா? கடுமையான நடவடிக்கைக்கு உட்பட்டதா என்பதெல்லாம் விவாதத்திற்கு உட்பட்டது.
காவல்துறை கண்ணியம் இழந்துவிட்டது: போலீசார் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீதான கண்ணியத்தைக் குலைக்கும். இயக்குநர் மோகன் பல திரைப்படங்களை இயக்கியவர். மிகவும் பிரபலமானவர். பல்வேறு தகவல்களை பொது ஊடகத்தில் சொல்லக்கூடியவர். அவரை கைது செய்யும்போது குறைந்தபட்ச சட்ட நடைமுறைகளையாவது பின்பற்ற வேண்டும். போலீசார் அதனைச் செய்யவில்லை.
பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம் எனப் பேசியதற்காக இந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கை தேவையா என்ற கேள்வி சாதாரண மக்களிடையே இருக்கிறது. என்ன நோக்கத்திற்காக எந்தச் சூழலில் அவர் அப்படி சொன்னார் என்பதெல்லாம் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டியது." எனத் தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் பாலு.
-
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications