இன்பங்கள் தரும் ஓணத்தை வரவேற்போம்.. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சென்னை: ஓணம் திருநாளைக் கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பண்பாட்டிற்கும், ஓணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை மலையாள மொழி பேசும் மக்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. மலையாள மக்களுக்கு டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், மக்களையே தமது சொத்தாக மதித்த மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். இந்த நாள் மகாபலி மன்னனை மட்டும் வரவேற்பதற்கான நாள் அல்ல... வாழ்க்கையில் நாம் அனுபவித்து வரும் துன்பங்களை, விலக்கி இன்பங்களையும் வரவேற்பதற்கான நன்நாள் ஆகும். அந்த வகையில் ஓணத்தை வரவேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓணம் திருநாள் அன்பை வலியுறுத்துகிறது. மக்கள் மீது மன்னன் கொண்டுள்ள அன்பையும், மன்னன் மீது மக்கள் கொண்டுள்ள நன்றிக்கடனையும் ஓணம் திருநாள் வெளிப்படுத்துகிறது. ஒரு நாடும், அதன் மக்களும் மகிழ்ச்சியாகவும், துன்பங்களைத் தொலைத்து இன்பமாக வாழ்வதற்கான இலக்கணத்தையும் ஓணம் திருநாள் வரையறுத்துள்ளது. அந்த இலக்கணத்தை பின்பற்றினால் வாழ்வில் இன்பமே நிறையும்.
ஓணம் திருநாளைக் கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அது நிறைவேறும் வகையில் துன்பங்கள் விலகி இன்பங்கள் நிறையவும், மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு கிடைக்கவும் ஓணம் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ராமதாஸ் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், மக்களை மகிழ்ச்சியாக வாழ வைத்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதே போல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை வாமணன் காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் திருநாள் அறுவடைத் திருநாள். ஓணம் திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும் திருநாள். தமிழர்களின் கலாச்சாரமே எல்லோரும், எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பது தான். ஓணம் திருநாள் வலியுறுத்துவதும் அதை தான். அந்த வகையில் தமிழ் பண்பாட்டிற்கும், ஓணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கியத்திலும் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன.
அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பது தான் ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தி. அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications