7 தமிழர் விடுதலையில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என சிபிஐ மனு- டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிச்சையாகவே முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் 2 ஆண்டுகளாக தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தரவில்லை.

சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணை அறிக்கைக்கு (எம்.டி.எம்.ஏ) காத்திருப்பதாக ஆளுநர் பன்வாரில் புரோஹித் தரப்பு தெரிவித்தது. ஆளுநரின் இந்த தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்தது.
மேலும் எம்.டி.எம்.ஏ. அறிக்கைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தாங்கள் நடத்தும் விசாரணைக்கும் ஆளுநர் முடிவெடுப்பதற்கும் தொடர்பு இல்லை என கூறியிருந்தது. சிபிஐ-ன் இந்த பதிலை வரவேற்று டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் தொடர்பு இல்லை; விசாரணை அறிக்கையை ஆளுனருக்கு தர மாட்டோம்; ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியிருக்கிறது. இது மிகச்சரியான நிலைப்பாடு ஆகும்.
எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தைக் காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6 தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழக ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications