அய்யா முகம் முழுக்க சந்தோஷம்..ராமதாஸ் வீட்டில் விசேஷம்! லட்சத்துல ஒருத்தருக்கு மட்டும் தான் நடக்கும்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இன்று தனது 60-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே 60-வது திருமண நாளை மனைவியோடு கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.
தமிழக அரசியல் கட்சி வரலாற்றில் சற்று வித்தியாசமானது பாட்டாளி மக்கள் கட்சி. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ் திரையுலகிலும் பிரபலமான நபர்கள் மூலம் தொடங்கப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவர் தொடங்கிய கட்சி என்றால் அது அப்போதைக்கு பாமக மட்டும் தான்.
மருத்துவராக இருந்த ராமதாஸ் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்து அதனை தற்போது பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி இருக்கிறார். இந்த கட்சியின் மூலம் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ,மத்திய அமைச்சர்கள் உருவாகி இருக்கின்றனர். ஆனால் ஒரு கவுன்சிலர் பதவியை கூட ராமதாஸ் வகித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1939 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த ராமதாஸின் தந்தையின் பெயர் சஞ்சீவிராய கவுண்டர். அவரது தாயார் பெயர் நவநீதம். தனது மருத்துவ படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்தவர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்பு தனியாக மருத்துவமனை தொடங்கி இரண்டு ரூபாய்க்கும் மூன்று ரூபாய்க்கும் மருத்துவம் பார்த்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் சொல்வார்கள்.
மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் சார்ந்த வன்னியர் சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதை பார்த்து பல்வேறு வன்னியர் சமுதாய அமைப்புகளை சந்தித்து, 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து 1980 ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தை தொடங்கினார். 1980 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் முதல் போராட்டத்தை நடத்தியது. அதற்குப் பிறகு பல போராட்டங்களை ராமதாஸ் மேற்கொண்டு இருக்கிறார். மெரினா பட்டினி போராட்டம், சென்னை பேரணி, அதனை தொடர்ந்து மாநாடு, 1986 இல் எம்.ஜி.ஆருக்கு கருப்பு கொடி, ரயில் மறியல் என பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என ஒரு வாரம் 1987 ஆம் ஆண்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வடமாவட்டங்கள் முடங்கியது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் மரணம் அடைந்தனர். அதற்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 108 சமுதாயங்களை எம்பிசி பட்டியலில் சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தொடர்ந்து அதே ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. என் வாழ்நாளில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என ராமதாஸ் கூறினார். அதை இன்று வரை கடைபிடித்து வருகிறார். ராமதாஸின் இவ்வளவு வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக இருந்தவர் அவரது மனைவி சரஸ்வதி. 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார் ராமதாஸ். அதற்குப் பிறகு ராமதாஸின் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் சரஸ்வதி தான் துணையாக இருந்தார்.
இந்த தம்பதியினருக்கு காந்திமதி, கவிதா என்ற மகள்களும் அன்புமணி ராமதாஸ் ஆகிய மூன்று குழந்தைகள். காந்திமதிக்கு சுகந்தன், பிரதீபன், முகுந்தன் என மூன்று குழந்தைகள். கவிதாவுக்கு நிதர்சன், வசீகரன் என இரண்டு குழந்தைகள். அன்புமணிக்கு அங்கமித்ரா, சங்கமித்ரா, சம்யுக்தா என மூன்று குழந்தைகள். இப்போது ராமதாஸின் பேரன் பேத்திகளுக்கும் திருமணம் முடிந்து கொள்ளு பேரன் பேத்திகளை பார்த்துள்ளார்.
அதைவிட முக்கியமானது இன்று ராமதாஸ் தனது 60-வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடி வருகிறார். இதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினரும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒருவருக்கு வாழ்வில் 60ஆவது திருமண நாளை கொண்டாடுவது அவ்வளவு எளிது கிடையாது. அது லட்சத்தில் ஒருத்தருக்கு மட்டுமே அப்படி அமையும் அப்படி தனது மனைவியுடன் 60-வது திருமண நாளை கொண்டாடும் ராமதாசை வாழ்த்துவதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications