சீரியஸ் ஆகும் கோவை மாணவி தற்கொலை சம்பவம்! ராமதாஸ் ஆவேச அறிக்கை!
சென்னை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயதுடைய மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

காமக்கொடூர ஆசிரியர் கைது
இந்த கொடூரம் காரணமாக மாணவி அந்த பள்ளியில் இருந்து விலகி வேறு பள்ளியில் சேர்ந்து விட்டார். ஆனாலும் காமக்கொடூர ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மாணவியை விடாமல் தொடர்ந்து டாச்சர் செய்து வந்ததும் அவன் மட்டுமில்லாமல் மாணவியின் தோழியின் தாத்தா, அப்பா ஆகியோரும் மாணவியை சீரழித்தது தெரியவந்தது.

மக்கள் போராட்டம்
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதால் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டான். இவனை மட்டும் கைது செய்தால் போதுமா? இதில் தொடர்புடைய மற்ற நபர்கள், பள்ளி முதல்வர், நிர்வாகிகள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாக்டர் ராமதாஸ் வேதனை
இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர்.

அனைவரையும் கைது செய்ய வேண்டும்
தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர். மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications