ராமதாஸ் இல்ல திருமண விழா.. நேரில் சென்று மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.. ராமதாஸ் பூரிப்பு!
சென்னை: பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.
Recommended Video
பா.ம.க இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கும், சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் தம்பதியரின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
கொரோனா காலம் என்பதால் நெருக்கிய உறவினர்கள் மட்டுமே அப்போது திருமணத்தில் கலந்து கொண்டனர். ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

அன்புமணி அழைப்பு
இதனை தொடர்ந்து திருமண வரவேற்பு விழா சென்னையில் 13-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வரவேற்பு விழாவிற்காக அன்புமணி பல்வேறு அரசியல் தலைவர்களை, பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதேபோல் அன்புமணி, அவரது மனைவி செளமியா அன்புமணி இருவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

நேரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
இருவரையும் இன்முகத்துடன் வரவேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமண வரவேற்பு விழாவுக்கு வருவதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் சென்னையில் திருமண வவேற்பு விழா நடந்தது. ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் உள்பட பலர் இதில் கொணடனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமண வவேற்பு விழாவுக்கு நேரில் சென்று மணமக்கள் ஷங்கர் பாலாஜி- சங்கமித்ராவை வாழ்த்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

புன்னகை ததும்ப இருந்த ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மணமக்களை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸிடம் சிறிது நேரம் பேசினார். மேலும் டாக்டர் ராமதாசின் உடல்நிலை குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மணமக்கள் மற்றும் ராமதாஸ் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் புன்னகை ததும்ப இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

போட்டி போட்டு பாராட்டு
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மு.க.ஸ்டாலினை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். ''ஸ்டாலினுக்கு நிர்வாக திறன் தெரியாது. அவர் ஒருபோதும் முதல்வராக முடியாது'' என்று அன்புமணி மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். பின்னர் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்தவுடன் பா.ம.க தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. தொடக்கம் முதலே ஸ்டாலின் நிறைவேற்றி வரும் திட்டங்களை ராமதாசும், அன்புமணி ராமதாஸும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திமுக-பாமக
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை இடஒதுக்கீடு சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து இருவரும் அடிக்கடி கருத்து கூறி வந்தனர். ஸ்டாலின் கொரோனாவை சிறப்பாக கையாளுகிறார் என்று , அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். சட்டசபையிலும் திமுக கொண்டு வரும் மசோதா, திட்டங்களுக்கு பாமக ஒத்துழைப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications