Seeman Vs Periyar: பெரியாரை சீமான் இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை: சமூக நீதிக்கு அடித்தளமிட்ட தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் இழிவுபடுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது; தந்தை பெரியார் இல்லை என்றால் என் தந்தை ராமதாஸ், நான்
மருத்துவர்களாகி இருக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் (பாமக) டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
சீமானின் பெரியார் மீதான இழிவான விமர்சனங்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் தந்த பதில்: டாக்டர் ராமதாஸ் இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு தந்தை பெரியாரை சிலர் இழிவுபடுத்துகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தந்தை பெரியார் இல்லை என்றார் ராமதாஸ் ஒரு மருத்துவராக இருந்திருக்கமாட்டார்.. நான் ஒரு மருத்துவராக இருந்திருக்கமாட்டேன்.. நமக்கு சமூக நீதியைப் பெற்றுக் கொடுத்தது தந்தை பெரியார்தான்.

இந்தியாவுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது யார் என்று சொன்னால் மகாத்மா காந்தி என்று சொல்கிறோம். மகாத்மா காந்தி அவரது சுய சரித்திரம் எழுதி இருக்கிறார். அதிலே சில செய்திகள் இருந்திருக்கலாம்.. அதனால் மகாத்மா காந்தியை பற்றி யாராவது இழிவாக பேச முடியுமா? மகாத்மா காந்தி என்றால் நம்முடைய தேசத்தந்தை.. அவ்வளவுதான்..
அதேபோல தந்தை பெரியார் அவர்கள் நமக்கு சமூக நீதியைப் பெற்றுக் கொடுத்தார். பெரியாரிடத்திலேயும் குறைகள் இருக்கலாம்.. அதற்காக அந்த குறைகளையே பேசுவது தவறு. எல்லோருக்கும் சின்ன சின்ன குறைகள் இருக்கும். ஆனால் சமூக நீதி என்ற
அடித்தளம் தந்தை பெரியார் போட்டுக் கொடுத்தது. தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இன்று பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற சூழலில்தான் இருந்திருக்கும். இன்றைக்கு சீமான் போன்றவர்கள் பெரியார் அப்படி செய்தார்.. இப்படி செய்தார் என பேசுவது எல்லாம் தேவை இல்லாதது. பெரியாரை கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக பேசுவது வேறு.. தனிநபர் விமர்சனங்களை எல்லாம் வைக்கக் கூடாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏற்கனவே பெரியார் குறித்த இழிவான சீமானின் விமர்சனங்களுக்கு மிக கடுமையாக பெரியார் தொண்டர்கள் எதிர்வினையாற்றும் நிலையில் பாமக பதிலடி தந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications