குடிகாரன்னு சொல்லாதீங்க.. எனக்கு கோவம் வரும்! கொந்தளித்த அமைச்சர் முத்துசாமிக்கு அன்புமணி கண்டனம்
சென்னை: மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி சமூகநீதி பேச வேண்டும் என்றும் குடிநீதி பேசக் கூடாது எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை காலையிலேயே திறப்பது பற்றி கோரிக்கை வந்து கொண்டு இருப்பதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு அப்போதே பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று கோவை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "காலையில் மது அருந்துபவர்களை குடிகாரர்கள் என சொல்லாதீர்கள். எனக்குக் கோவம் வந்துவிடும். குடிப்பவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக ஆலோசனைக் கூறுங்கள். காலையில் கடும் பணிக்கு செல்பவர்கள் குடிக்கும் போது குடிகாரர்கள் என விமர்சிக்காதீர்கள்.
ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதில் தவறு இல்லை. காலையில் தூய்மை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் நாற்றத்தை பொறுத்துக்கொள்ள மது அருந்துகிறார்கள். எனவே அவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது." என்றார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார்.
இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை. சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!
மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது. நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications