வன்னியர் மகளிர் மாநாடு.. முகப்பில் சிரித்த சரஸ்வதி! அன்னைக்கு ஏன் அப்படி பேசுனாரு ராமதாஸ்? குழப்பம்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றிருக்கும் நிலையில், மாநாட்டு முகப்பில் அன்புமணி ராமதாஸின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் புகைப்படம் பெரிய அளவில் இடம் பெற்றிருக்கிறது. எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என ராமதாஸ் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது மனைவியின் புகைப்படத்தை முதன்முறையாக வன்னியர் சங்க நிகழ்வில் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து பாமகவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சுணக்கம் அடைய செய்திருக்கிறது.
வன்னியர் சங்கத்தின் பிரம்மாண்ட மாநாடு, பாமக பொதுக்குழு, வன்னியர் மகளிர் மாநாடு என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளில் தந்தை மகன் தனித்தனியாக பங்கேற்று வருகின்றனர். கடைசியாக இருவரும் வன்னியர் சங்க மாநாட்டில் ஒன்றாக பங்கேற்று இருந்தனர்.

அன்புமணி ராமதாஸ்
அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தனது மருமகளை அரசியலுக்கு வரக்கூடாது என தான் சொன்னதாகவும், ஆனால் அதனையும் மீறி அவர் தேர்தலில் போட்டியிட்டதாக கூறியிருந்தார். அதாவது கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிட்டதை குறிப்பிட்டு தான் ராமதாஸ் அப்படி குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சியின் அடுத்தகட்ட தலைவர்களாக அன்புமணியின் மனைவி மற்றும் அவரது மகள்கள் வரவேண்டும் என பாமகவினர் விரும்புகின்றனர்.
ராமதாஸ்
அதே நேரத்தில் தனது மகள் மற்றும் பேரன்கள் வரவேண்டும் என விரும்புகிறார் ராமதாஸ் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள். கட்சியின் எதிர்காலம் அன்புமணி என்பதுதான் பாமகவினரின் கருத்து. ஆனால் ராமதாஸ் மாற்றி மாற்றி பேசி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதாவது மக்களவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட்டது ராமதாஸுக்கு பிடிக்கவில்லை என்றால் பாமக தரப்பில் நடத்திய செயற்குழு கூட்டத்தில் அவரது மகள் காந்தியை மேடை ஏற்றியது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.
வன்னியர் மகளிர் மாநாடு
குறிப்பாக இன்று நடைபெறும் வன்னியர் மகளிர் மாநாட்டிலும் தனது மனைவியின் புகைப்படத்தை முதன்முதலாக பொதுவெளியில் பயன்படுத்தியிருக்கிறார் ராமதாஸ். பூம்புகாரில் இன்று வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் அன்புமணி ராமதாஸின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. மாநாட்டு முகப்பு தொடங்கி மேடை வரை பல்வேறு இடங்களில் பேனர்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் எதிலுமே அன்புமணியின் புகைப்படம் இடம்பெறவில்லை.
ராமதாஸ் மனைவி சரஸ்வதி
இதற்கான ஏற்பாடுகளை செய்தது ஜிகே மணி எனக் கூறப்படுகிறது. மேலும் மாநாட்டு முகப்பில் மிக பிரம்மாண்டமாக ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. நேற்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அனைத்து இடங்களிலும் ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. சிலர் ராமதாஸின் புகைப்படங்கள் இல்லாமல் பேனர் வைத்திருந்த நிலையில் அவற்றை அகற்றச் சொல்லிவிட்டு புதிய பேனர்களை வைக்க வேண்டும் என அன்புமணி கூறினாராம்.
குடும்ப அரசியல்
அதே நேரத்தில் தனது தலைமையில் நடக்கும் மாநாட்டில் அன்புமணியின் புகைப்படத்தை பயன்படுத்தாத ராமதாஸ், தனது மனைவியின் புகைப்படத்தை முதன் முதலாக பொதுவெளியில் பயன்படுத்தியிருக்கிறார். மருமகளை அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லிவிட்டு ராமதாஸ், மகள் மற்றும் மனைவியை முன்னிலைப்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்புகின்றார் அன்புமணி ஆதரவாளர்கள்.
-
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
லாஸ்ட்டில் ராமதாஸ் "இவருடன்" கூட்டணியா? வடக்கையும் தெற்கையும் அதிரவைக்கும் அரசியல்வாதி யார்? -
கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம் -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட்? அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்.. அடுத்து அன்புமணியுடன் மீட்டிங் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்











Click it and Unblock the Notifications