அப்பா, மகன் பஞ்சாயத்து.. பாமகவுக்குள்ளேயே ப்ளாக்‌ஷீப்? திமுகவுடன் சகவாசம்.. கூட்டணியை தடுப்பது இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நிலவுகிறது. இந்த நிலையில் இந்த மோதலுக்கு முக்கிய காரணம் கட்சியின் சீனியரான ஜிகே மணி தான் எனவும், திமுகவுடன் ரகசிய கூட்டு வைத்துக் கொண்டு அதிமுக பாஜக கூட்டணிக்கு பாமக செல்லக் கூடாது என திட்டமிட்டு பணியாற்றி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் நம்மிடம் பேசிய சில பாமகவினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 மே மாதம் தான் என்றாலும் தற்போது அரசியல் களம் சூடாக இருக்கிறது. அதிமுக - திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி வேலைகளை ஆரம்பித்து விட்டன. தற்போது அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டுவர பேச்சுவார்த்தை நடக்கிறது. மறுபுறம் பாமக உடன் கூட்டணி வைக்க வேண்டுமென விஜயும் விரும்புகிறாராம்.

அதே நேரத்தில் பாமகவில் கூட்டணி தொடர்பாக அன்புமணி ராமதாஸ் ராமதாஸ் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. வட மாவட்டங்களில் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது கூட்டணிக்கு இழுத்து வர வேண்டும் என பாஜக விரும்புகிறது.

PMK Anbumani Ramadoss GK Mani

திமுகவும் அதிமுகவும் கடந்த தேர்தல்களை பாமகவை எதிர்பார்த்து காத்திருந்தது என்னமோ உண்மைதான். தற்போது திமுக கூட்டணிக்கு பாமக செல்லாது என்பது உறுதியாகி இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணிக்கும் பாமக செல்லக்கூடாது என திமுக விரும்புகிறது. கூட்டணியை பலப்படுத்துவதை விட எதிர் கூட்டணியை வீழ்த்துவது தான் தற்போதைய புதிய ஸ்டைல். இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணியில் இல்லாததால் வலுவாக இருந்த மாவட்டங்களிலேயே அதிமுக தோல்வியை சந்தித்தது.

அதே நேரத்தில் தர்மபுரி உள்ளிட்ட தொகுதிகளில் பாமக இரண்டாவது இடத்திற்கு சென்று அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் வாக்கு சதவீதம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அதிமுக பாஜக கூட்டணிக்கு பாமகவை இழுக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்சி தலைமை இடையே மோதல் நிலவுகிறது. நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக்குவதாகவும் நானே கட்சியின் தலைவர் என கூறியிருந்தார்.

அதே நேரத்தில் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தான் தலைவர் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். பிரச்சனை குறித்து நம்மிடம் சில பாமக நிர்வாகிகள் பேசினர். அவர்கள் சொன்னது தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ரகம். காரணம் அவர்கள் கைகாட்டியது ஜிகே மணியை. தந்தை மகனுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பெரிதாக்குவது ஜிகே மணி தான் என சொல்கின்றனர்.

தான் வகித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை ராமதாஸ் அன்புமணிக்கு கொடுத்ததிலிருந்து அன்புமணி மீது ஜிகே மணிக்கு கடுமையான கோபமாம். தனது மகனை இளைஞர் அணி தலைவர் பதவியில் நியமித்து விட்டு அதற்குப் பிறகு அவராகவே ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு அன்புமணி தான் காரணம் என ஜிகே மணி நினைக்கிறாராம்.

தற்போது ராமதாஸின் வயது மற்றும் மனநிலையை கையில் வைத்துக்கொண்டு அவர்களது குடும்பத்தினரையும் குழப்பி தந்தை மகனுக்கு இடையே பிரச்சனைகளை பெரிதாக்கிவிட்டார் ஜிகே மணி என்கின்றனர். மேலும் திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து மறைமுகமாக தொடர்பில் இருப்பதாகவும் சட்டப்பேரவையில் அடிக்கடி அமைச்சர்களை சந்திப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அதிமுக பாஜக கூட்டணிக்கு பாமக செல்லக்கூடாது என ஜிகே மணி நினைப்பதாகவும் இதன் காரணமாகத்தான் தற்போது தந்தை மகன் இடையே பிரச்சனையை மூட்டி விட்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படி எனும் கட்சியின் எதிர்காலம் அன்புமணி தான் என்பதால் தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனைகள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். அடுத்து கட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+