பாஜகவுக்கு ஒரு இடமும் இல்லை.. இழுபறியில் கூட 3-வது இடம்-பாமகவுக்கு ஒரே ஒரு தொகுதி- நக்கீரன் சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு சேலம் மேற்கு தொகுதியில் மட்டும் வெல்லும் வாய்ப்பு உள்ளது என்கிறது நக்கீரன் சர்வே.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலானவை திமுக தனித்தே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே கூறி உள்ளன.

நக்கீரன் சர்வே
இந்நிலையில் நக்கீரன் வாரம் இருமுறை இதழ், தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதிலும் திமுக 140க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு என்கிறது நக்கீரன் சர்வே.

பாஜகவுக்கு ஜீரோ
அத்துடன் அதிமுக அணியில் போட்டியிட்ட பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிறது இந்த சர்வே. இழுபறியாக குறிப்பிடப்பட்டிருக்கும் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியும் ஒன்று. ஆனால் இந்த தொகுதியிலும் வானதி சீனிவாசனுக்கு 3வது இடம் கொடுத்துள்ளது நக்கீரன்.

பாமகவுக்கு ஒன்று
அதேபோல் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை வாங்கி போட்டியிட்ட பாமகவுக்கு சேலம் மேற்கு தொகுதியில் மட்டும்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறதாம். எஞ்சிய 19 தொகுதிகளிலும் பாமகவுக்கு தோல்வி முகம் என்கிறது தேர்தலுக்கு முந்தைய நக்கீரன் கருத்து கணிப்பு.

இழுபறியில் வடக்கு, கொங்கு தொகுதிகள்
நக்கீரனின் கணிப்பில் இழுபறி தொகுதிகள்: ஆர்.கே. நகர், ராயபுரம், விருகம்பாக்கம், தி.நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பல்லாவரம், செய்யூர் (தனி), உத்திரமேரூர், சோளிங்கர், கே.வி.குப்பம் (தனி), ஜோலார்பேட்டை, போளூர், திண்டிவனம் (தனி), உளுந்தூர்பேட்டை, நாமக்கல், குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, கோபிசெட்டிப்பாளையம், உடுமலைப்பேட்டை, கூடலூர் (தனி), தொண்டாமுத்தூர், கோவை தெற்கு,

டெல்டா, தென்மாவட்ட இழுபறி தொகுதிகள்
குன்னம், விருத்தாசலம், நாகப்பட்டினம், நன்னிலம், திருவிடைமருதூர் (தனி), தஞ்சாவூர், பேராவூரணி, விராலிமலை, புதுக்கோட்டை, நிலக்கோட்டை, வேடசந்தூர், சிவகங்கை, போடி: சாத்தூர், சிவகாசி பரமக்குடி, விருதுநகர், திருவாடானை, கோவில்பட்டி, அம்பாசமுத்திரம்:
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications