சிறுத்தைபோல் நடந்து சென்றாய்.. நீ வடக்கிலே கிழக்கு.. வைகோவுக்கு வைரமுத்து உணர்ச்சிகர வாழ்த்து
சென்னை: நீ வடக்கிலே கிழக்கு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். திமுக சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம் மற்றும் வில்சன், அதிமுக சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்றனர்.
அனைவருமே தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது சிறப்பு.

இதனிடையே, வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதை பாருங்கள்: வாழ்த்துக்கள் வைகோ...
வாழ்த்துக்கள் வைகோ...
— வைரமுத்து (@vairamuthu) July 25, 2019
சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்
போர்த்திறம் பழக்கு – விட்டுப்
போகட்டும் வழக்கு – உன்
வார்த்தைகள் முழக்கு – நீ
வடக்கிலே கிழக்கு@mdmkiw #Vaiko #mdmk #மதிமுக
சிறுத்தைபோல் நடந்து சென்றாய், செம்மொழி உறுதி பூண்டாய், நிறுத்தவே முடியவில்லை, நீள்விழி வடித்த கண்ணீர்
Delhi: MDMK leader Vaiko takes oath as member of Rajya Sabha. pic.twitter.com/WZtkHcKPEJ
— ANI (@ANI) July 25, 2019
போர்த்திறம் பழக்கு - விட்டுப் போகட்டும் வழக்கு - உன் வார்த்தைகள் முழக்கு - நீ வடக்கிலே கிழக்கு.
இவ்வாறு வைரமுத்து உக்கிரமான தமிழ்ச் சொற்களால் வரிகளை அமைத்து வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications