“பானைக்காரியின் காதல்!” சீனு ராமசாமியின் படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம்! ரசித்து விளக்கிய வைரமுத்து
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான சீனு ராமசாமியின் திரைப்படத்திற்கு, பாடல் எழுதிய அனுபவங்களை கவிஞர் வைரமுத்து விளக்கியுள்ளார். இது குறித்து x சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருக்கும் விளக்கத்தை நெட்டிசன்கள் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு திரைப்பட பாடலுக்கும் இரு வேறு அர்த்தங்கள் இருப்பது வழக்கமான ஒன்றுதான். கேட்பவர்களின் சிந்தனைகளுக்க ஏற்ப இந்த பாடல்கள் பொருள்படும். ஒருவகையில் இப்படி இருப்பதால்தான் என்னவோ திரைப்பட பாடல்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் இருக்கிறதோ என்னவோ! இப்படியான பாடல்களை எழுதிய கவிஞர்கள் எப்போதாவது இதற்கு விளக்கங்களையும் சொல்வதுண்டு. அந்த வகையில் சமீப நாட்களாக தன்னுடைய பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து சில விளக்கங்களை கொடுத்து வருகிறார். இயக்குநர் சீனு ராமசாமியின் திரைபடத்திற்கு பாடல் எழுதிய அனுபவத்தை தற்போது அவர் விளக்கியுள்ளார். அதாவது,

சீனுராமசாமி
நல்லதொரு கதைசொல்லி
அவள் பானை விற்கிறவள்;
இவன் கோழி விற்கிறவன்
பானைக்காரிக்குக்
கோழிக்காரன்மீது
ஒருதலைக் காதல்
அவனோ
வாழ்வில் நொந்துபோனவன்;
பால்யத்தில் நரைத்தவன்
அவளுக்குப் புரிகிற மொழியில்
காதலை நிராகரிக்க வேண்டும்
அதுதான் பாட்டு
ரகுநந்தன் மெட்டுக்கு
வட்டார வழக்கில்
எழுதினேன்
அவரவர் தொழில்வழி
இயங்கியது தமிழ்:
"ஒடைஞ்ச பானைக்கு
ஒலை எதுக்கு? - அடி
அறுத்த கோழிக்கு
அடை எதுக்கு?"
படித்ததும் -
சீனிச்சேவு
சாப்பிட்ட குழந்தைமாதிரி
சிரித்தார் சீனு
சீனுராமசாமி
— வைரமுத்து (@Vairamuthu) November 17, 2023
நல்லதொரு கதைசொல்லி
அவள் பானை விற்கிறவள்;
இவன் கோழி விற்கிறவன்
பானைக்காரிக்குக்
கோழிக்காரன்மீது
ஒருதலைக் காதல்
அவனோ
வாழ்வில் நொந்துபோனவன்;
பால்யத்தில் நரைத்தவன்
அவளுக்குப் புரிகிற மொழியில்
காதலை நிராகரிக்க வேண்டும்
அதுதான் பாட்டு
ரகுநந்தன் மெட்டுக்கு
வட்டார… pic.twitter.com/YvkXmuzpZj
என தன்னுடைய கவிதை மூலமாக அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இதனை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே சீனு ராமசாமி இயக்கிய படங்கள் சில தேசிய விருதுகளை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications