நொய்டாவில் வேறு பெயரில் சம்போ செந்தில்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டவர்! நெருங்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பிரபல ரவுடி சாம்போ செந்தில் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ள போலீசார் விரைவில் அவரை கைது செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Armstrong Police

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது.

கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகியான மலர்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து மலர் கொடியை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதேபோல கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரனும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஜிகே வாசன் அறிவித்தார். மேலும் பாஜக நிர்வாகியான அஞ்சலை என்பவரும், அதிமுக கவுன்சிலரான ஹரிதரனும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாமாக பிரமுகர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்போ செந்தில் என்ற பிரபல ரவுடிக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கொலைக்கு பண உதவி செய்தது சம்போ செந்தில் தான் என்பதும், ஹரிஹரன் மூலமாக அந்த பணம் ஏற்கனவே கைதான அருளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பணத்தை பிரித்து சிலருக்கும் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது போலீசார் தேடி வரும் சம்போ செந்தில், சென்னையில் ஏற்கனவே பல சம்பவங்களை செய்திருக்கிறார். குறிப்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திர குமார் கொலை, முத்தியால்பேட்டையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி விஜயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது இருக்கிறது. இந்த நிலையில் அவரை காவல்துறையினர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வலைவீசி தேடி வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து கொண்டு தமிழகத்தில் கொலை திட்டங்களை தீட்டி கொடுப்பதுதான் சம்போ செந்திலின் வேலை என கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கும் சம்போ கொலை சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை அதில் முதலீடு செய்து இருக்கிறார். இந்த நிலையில் தொழில் போட்டி காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் தொடர்பான போட்டியில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது செந்தில் தலைமைகளாக இருக்கும் நிலையில் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் சம்போ செந்தில் வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது இருப்பிடத்தை கண்டறிந்துள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+