பாத்ரூமில் பிங்கி.. ஃபுல் போதை.. "அந்த" விஷயத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் கொடூர கொலை.. 2 பேர் கைது

வடமாநில பெண்ணை கொலை செய்ததில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Pinky : போதையில் ஏற்பட்ட தகராறில் பெண் கொலை.. 2 பேர் கைது- வீடியோ

    சென்னை: பாத்ரூமில் பிங்கி பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். மது போதையில் ஜாலியாக இருந்தபோது நடந்த சண்டையால்தான் பிங்கி கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி. வயசு 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர்.

    பிங்கி ஒரு தொழிலதிபர்.. நல்ல வசதி.. அண்ணாநகரில் குடியிருந்து வந்தார். சேலை விற்பனை செய்து வந்தார். மேலும் டாட்டூ வரைதல் வேலையும் பார்த்து வந்தார்.

    பாத்ரூம்

    பாத்ரூம்

    கணவரை பிரிந்து வாழும் பிங்கியுடன் 26 வயசு இளைஞர் ஒருவர் தங்கி இருக்கிறார். இந்நிலையில், வெளியே சென்றிருந்த அந்த இளைஞர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பாத்ரூமில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன இளைஞர், உடனடியாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் சொன்னார்.

    அடையாளம்

    அடையாளம்

    விரைந்து வந்த போலீசார், பிங்கியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை ஆரம்பித்தனர். முதல் வேலையாக பிங்கியின் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்று, சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

    ஆரம்பம்

    ஆரம்பம்

    அவர்கள் யார் என்று போலீசார் அடையாளம் கண்டு அவர்களுடனும், பிங்கியின் வீட்டிலேயே தங்கி இருந்த அந்த இளைஞரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் செல்போனில் பிங்கியுடன் யார் கடைசியாக பேசியது என்ற ஆய்வும் ஆரம்பமானது. அதன்படி, மேற்கு வங்கத்தை சேர்ந்த விகாஷ்சர்மா மற்றும் விகாஷ்குமார் என்ற 2 பேர்தான் பிங்கியிடம் கடைசியாக போனில் பேசியது தெரிந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    அப்போது வெளியான திடுக் தகவல் இதுதான்: கணவரை பிரிந்து வாழ்ந்த பிங்கி, வீட்டிலேயே கிருஷ்ணா பகதூர் என்ற இளைஞரை கல்யாணம் செய்து கொள்ளாமல் வீட்டிலேயே தங்க வைத்து வசித்து வந்துள்ளார். இவர் டாட்டூ குத்துபவர் என்பதால், வீட்டிற்கு அடிக்கடி வெளி மாநில இளைஞர்கள் வந்து சென்று உள்ளனர். யாரெல்லாம் வடமாநிலத்தில் இருந்து டாட்டூ போட்டுக் கொள்ள வருகிறார்களோ, அவர்களுடன் பிங்கி தண்ணி அடிப்பது வழக்கமாம்.

    ஜாலி

    ஜாலி

    சம்பவத்தன்றும் இப்படித்தான் வீட்டிற்கு விகாஷ்குமார், விகாஷ் சர்மா என்ற 2 பேரும் வந்துள்ளனர். அவர்களுடன் பிங்கி தண்ணி அடித்துள்ளார். பிறகு 2 பேரும் பிங்கியுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அதற்கான பணத்தையும் தந்துள்ளனர். திரும்பவும் ஜாலியாக இருக்க கூப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் பணம் குறைவாக இருந்திருக்கிறது.

    உல்லாசம்

    உல்லாசம்

    இதை கவனித்த பிங்கி, உல்லாசமாக இருக்க மறுப்பு சொல்லி உள்ளார். இதுதான் விஷயமே.. ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் பிங்கியை கட்டாயப்படுத்தி, பலமாக தாக்கி, உல்லாசமாக இருக்க முயன்றுள்ளனர். அப்போது பிங்கி சத்தம் போட்டுள்ளார். பயந்து போன 2 பேரும், தலைகாணியால் பிங்கி முகத்தை அமுக்கவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிங்கி இறந்துவிட்டார்.

    கைது

    கைது

    உடனே சடலத்தை பாத்ரூம் வரை இழுத்து சென்று, சுவற்றில் வலுக்கட்டாயமாக மோதி, வழுக்கி விழுந்து இறந்துவிட்டதுபோல ஒரு செட்டப் செய்து விட்டு இருவரும் தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+