“திருமணம் தாண்டிய உறவு” கணவன் கண்முன்னே போர்வைக்குள்ளேயேவா? மனைவிக்கு நேர்ந்த கதி.. சிலிர்த்த சென்னை
சென்னை : சென்னையில் காதலித்து திருமணம் செய்த பெண் வேறு ஒருவருடன் செல்போனின் பேசுவதை நிறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநனரான புகழ்கோடி (எ) டில்லி சரிதா என்ற இளம் பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இரு வீட்டு பெற்றோர்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்த நிலையில் இருவரும் அதே பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

காதல் மனைவி
இந்நிலையில் காதல் மனைவி சரிதா வேறு ஒருவருடன் செல்போனில் பேசுவதை அறிந்த கணவன் புகழ்கோடி பலமுறை சரிதாவை எச்சரித்துள்ளார். ஒருமுறை மனைவி சரிதா அவருடைய ஆண் நண்பரிடம் பேசுயதை செல்போனில் தானாக ரெக்கார்ட் ஆகும்படி செய்து அதை காண்பித்து ஒருமுறை மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு நான் பேச மாட்டேன் என்று கூறிய மனைவி தொடர்ந்து அவருடைய ஆண் நண்பரிடம் பேசி வந்துள்ளார்.

ஆண்நண்பருடன் பேச்சு
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு கணவன் உறங்கிவிட்டான் என்று நினைத்துக் கொண்ட அவருடைய மனைவி சரிதா செல்போனில் அவரது ஆண் நண்பருடன் போர்வையை மூடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது கணவன் புகழ்கோடி ஆத்திரமடைந்து மனைவியை சரமாரி அடித்துள்ளார். கண்மூடித்தனமாக மனைவியை அடித்த கணவன் இரவு உறங்கி விட்டு காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி சுயநினைவை இழுந்து இருந்ததால் மனைவியை மீட்டு கண்ணகி நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அடித்துக் கொலை
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த மனைவி சரிதா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கணவன் கைது
சரிதாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து புகழ்கோடியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட என் மனைவி எனக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து நான் கண்டித்தும் மனைவி கள்ளத்தொடர்பை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்து அடித்தேன் என்று கூறியதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications