14 வயது மகளை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த தந்தை.. மனைவி உடந்தை.. சென்னையில் கொடுமையான சம்பவம்
சென்னை: பெற்ற தந்தையே மகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இதற்கு அந்த நபரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
Recommended Video
சென்னை திருவொற்றியூர் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அதற்கு உதவியாக இருந்த இரண்டாவது மனைவியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
எப்படி இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது தெரியுமா?

மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் சோகமாக அமர்ந்து இருந்துள்ளார் 14 வயது சிறுமி. அவரை பார்த்த காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் வெறித்து பார்த்தபடி இருந்துள்ளார். எனவே மெரினா காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருக்கக்கூடிய காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்தனர். காப்பகத்தில் உள்ளவர்கள் சிறுமிக்கு உணவு கொடுத்தனர். ஆனால் அந்த சிறுமி எதுவும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்தார்.

இரண்டாவது திருமணம்
இந்த நிலையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சோ்ந்த குமாா் (வயது 40) என்பவருடைய மகள் இவர் எனத் தெரியவந்தது. குமார் மனைவி உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டாவதாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

ஒரு மாதமாக பலாத்காரம்
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இதற்கு, இரண்டாவது மனைவி கஸ்தூரி உதவி செய்த அசிங்கம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் தெரிவிக்கபட்டு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போக்ஸோ சட்டம்
விசாரணையில், சிறுமிக்கு அவரது தந்தை குமாா் குளிா்பானத்தில் மதுவை ஊற்றிகொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியதும் அதனை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்த கஸ்தூாி ஆகிய இருவா் மீதும் போக்ஸோ சட்டம் மற்றும் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளியுள்ளது போலீஸ்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications