கோயம்பேட்டில் தடையை மீறி அமைதி பேரணி நடத்திய தேமுதிகவினர்.. விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மரியாதை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அக்கட்சி சார்பில் இன்று அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தேமுதிக திட்டமிட்டது. இந்த பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
எனினும் அமைதி பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியை தொடங்கினர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் எல் கே சுதீஷ், விஜயபிரபாகரன், தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து பேரணியாக சென்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகரும் தேமுதிக தலைவருமாக இருந்த மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்தது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , தவெக தலைவர் விஜய் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுப்பு
அதேபோல விஜயகாந்த நினைவு தினமான இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
அமைதிப்பேரணி நடத்த அனுமதி கோரி போலீசாருடன் தேமுதிகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்தில் அனுமதி வழங்க கோரி தேமுதிகவினர் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல காரணத்தால் தேமுதிகவினரின் அமைதிப்பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
தடையை மீறி பேரணி
இந்த நிலையில் காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதிப்பேரணியை தொடங்கினர். சுமார் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு சாலையில் பேரணியாக சென்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் எல் கே சுதீஷ், விஜயபிரபாகரன், தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து பேரணி சென்றனர். பேரணியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் விஜயகாந்த் சிலையில் ஒரு நிமிடம் சாய்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக விஜயகாந்தின் நினைவுதினத்தையொட்டி, அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பது என்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சியா இல்லை போலீசாரின் காழ்ப்புணர்ச்சியா என்று தெரியவில்லை என தேமுதிகவின் துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார். மேலும் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி நடத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். எனினும் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.
தேமுதிகவினர் சாலை மறியல்
இதனால் தேமுதிக தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு கோயம்பேடு சாலையில் அமர்ந்து தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தான் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணியை தொடங்கியுள்ளனர். விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக செல்கின்றனர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆம் தேதி அன்றே காவல்துறையினரிடம் அமைதிப் பேரணிக்கு அனுமதி கேட்டதாகவும், ஆனால் நேற்று மாலை தான் போலீசார் அனுமதி தர மறுத்து இருப்பதாக தேமுதிகவினர் கூறினர். வேண்டும் என்றே கடைசி நேரத்தில் தெரிவித்தனர் என்றும் கூறினர்.

அரசியல் தலைவர்கள் மரியாதை
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பாட்டாளி மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் விஜயகாந்த் என்றும், புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளரவிட்டவர் என்றும் சீமான் பேசினார்.
அமைச்சர் சேகர்பாபு விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் பேரணி தொடர்பாக பேசி பேசி பிரச்சினையை வளரவிட வேண்டாம் என்று கூறினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெய்க்குமாரும் அதிமுக சார்பில் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications