Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் ஆரம்பித்த பிரச்சினை! இன்னும் முடியலையா? தமிழகத்தில் இத்தனை அரசு பேருந்துகளுக்கு அபராதமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகிறார்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதங்களை விதித்து வருகிறார்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, நோ என்ட்ரியில் வாகனங்களை நிறுத்துவது , சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் வாகனம் இயக்குவது, செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

Here is the round up of fine imposed against Tamil nadu Government buses by Traffic police


அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தில் கடந்த 21 ஆம் தேதி காவலர் ஒருவர் ஏறினார். அப்போது அவரிடம் கன்டெக்டர் டிக்கெட்ட கேட்ட போது எடுக்க முடியாது என்றார். இது தொடர்பான வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்கும் டிக்கெட் கிடையாது.

நாங்களும் அரசு பணி செய்பவர்கள்தானே எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாசம் செய்தாராம். இதைத் தொடர்ந்து அரசு பேருந்தில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் என கன்டக்டர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததுடன் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள்.

போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலைதானே பார்க்கிறோம். எங்களையும் இலவசமாக நீங்கள் ஏன் பயணிக்க விடக் கூடாது என கேட்டு வாக்குவாதம் செய்தார். நாங்குநேரியில் நடந்த சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம் செய்த காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அது போல் நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற 3 அரசு பேருந்துகளில் வள்ளியூர் போக்குவரத்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுநருக்கும் தலா ரூ 500 அபராதம் விதித்தனர்.

பல பகுதிகளில் அரசு பேருந்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்த டிராபிக் போலீசார்.. பதிலடியா?


மேலும் நம்பியாவின்விளையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மரிய இந்திரன் ஹெல்மெட் அணியவில்லை என கூறி ரூ 1000 அபராதம் விதித்தனர். விதிமுறைகளை மீறியதாக 18 அரசு பேருந்துகள், 7 தனியார் பேருந்துகளுக்கு ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.

அது போல் கடலூர் நகர பகுதியில் 4 அரசு மற்றும் 6 தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு ரூ 2500 அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதி இல்லாத ஒன்வே பாதையில் சென்றதாக 5 அரசு பேருந்துகளுக்கும் தலா ரூ 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை அருகே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த 25 அரசு, ஆம்னி பேருந்துகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாங்குநேரியில் போலீஸிடம் டிக்கெட் கேட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் படலமாக அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+