Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஜகவிற்கு வாக்களிக்காததால் கொலை".. பொய்யான செய்தி பரப்பிய கும்பல்.. 9 பேரை தூக்க போகும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டது குறித்து செய்தி பரப்பிய 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. வடஇந்தியாவை சேர்ந்த சின்ஹா என்பவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

கோமதி திமுகவிற்கு வாக்களிக்காத காரணத்தால் கொலை செய்யப்பட்டதாக வடஇந்தியர்கள் சிலர் பொய்யாக தகவல் பரப்பி வருகின்றனர்.

Police files FIR on 9 people against those spreading fake news on the death of a woman in Cuddalore

போலீஸ் எச்சரிக்கை: இது தொடர்பாக போலீஸ் கொடுத்த எச்சரிக்கையை, கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி,அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி. பாண்டியன்.

அறிவுமணி, அருள்செழியன். தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர். அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார். ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர்கள்! ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில் இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள. கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் PS Cr.No. 96/2024 U$ 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN Girasolt துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில் ஐந்து பேர், 1 கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. என்பதும். வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது, என்று கூறியுள்ளனர்.

தீவிர வலதுசாரி ஆதரவாளர் சின்ஹா என்பவர் இது தொடர்பாக பொய்யான செய்தியை பரப்பி இருந்தார். அதில்., கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் கோமதி பாஜகவிற்கு வாக்களித்துள்ளார். இதை திமுகவினர் கேள்வி கேட்டுள்ளனர். அவர் பாஜகவிற்கு வாக்கு அளித்த காரணத்தால் அந்த பெண்ணை திமுகவினர் அடித்து கொலை செய்துள்ளனர் என்று பொய்யான செய்தியை சின்ஹா பரப்பி இருந்தார்.

வடஇந்தியர்கள் பலரும் இதை பகிர்ந்து தமிழ்நாட்டை விமர்சனம் செய்தனர். பலரும் திமுகவை விமர்சனம் செய்தனர். நடக்காத விஷயத்தை பகிர்ந்து பொய்யாக விமர்சனம் செய்தனர். நேற்று முதல்நாள் கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.

இவர் குடும்ப பிரச்சனை காரணமாகவே கொலை செய்யப்பட்டார். இதை குறிப்பிட்டு போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். சின்ஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

போலீசார் விடுத்த எச்சரிக்கையை அடுத்து சின்ஹா தனது பொய்யான போஸ்டை நீக்கி என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பது போல கெஞ்சி கேட்டுள்ளார். இந்த நிலையில்தான் கோமதி கொலை செய்யப்பட்டது குறித்து செய்தி பரப்பிய 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. வடஇந்தியாவை சேர்ந்த சின்ஹா என்பவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+