மீம் வீடியோ போட்டு காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்.. காவல் ஆணையர் அதிரடி
சென்னை : காவல்துறை மானிய கோரிக்கை அறிவிப்பை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மானியக் கோரிக்கையை விமர்சித்து ஃபேஸ்புக்கில் மீம் வீடியோ பதிவிட்ட தேனாம்பேட்டை தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2 நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையில் பதிலுரையாற்றி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர்சிங் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிச் சூடு இல்லை, இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன எனத் தெரிவித்தார்.
மேலும், 101 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 4,500 ரூபாய் சீருடைப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகரில் 2,000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் சென்னை மாநகர காவல்துறைக்காக நவீன உபகரணங்கள் வாங்கப்படும்.
குற்றவாளிகளை கைது செய்ய 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகள் வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சி மோசடியை கண்டிபிடிக்க செயின் பகுப்பாய்வு ரீயாக்டர் கருவி வாங்கப்படும். அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில் காவல்துறை மானிய கோரிக்கை அறிவிப்பை விமர்சித்து ஃபேஸ்புக்கில் வீடியோ மீம் பதிவிட்ட தேனாம்பேட்டை தலைமைக் காவலர் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications