இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்த திருநாவுக்கரசுக்கு உதவி செய்த பெண் தோழி.. போலீஸ் விசாரணை
Recommended Video

சென்னை: இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்த திருநாவுக்கரசுக்கு உதவியாக இருந்த தோழி யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெண்களை கதற கதற பலாத்காரம் செய்த வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் பெண்களின் அழுகுரல்கள் கேட்டதை அடுத்து தமிழகமே கொந்தளிப்பில் இருந்தது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதன் பேரில் எங்களை இவ்வாறு செய்யச் சொன்னதே திருநாவுக்கரசுதான் என வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவை போலீஸார் தேடி ஆந்திரத்தில் கைது செய்தனர்.

காதல் வலை
அவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீஸார் அடைத்தனர். இந்த கும்பலின் முக்கிய தலைவராக இருந்த திருநாவுக்கரசு குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கல்லூரியில் படிக்கும் போதே கை நிறைய பணம், அழகு ஆகியவற்றை கொண்டு எளிதில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து விடுவாராம்.

செல்போன் எண்கள்
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தோழி மூலம் இவருக்கு இளம்பெண்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. தனது பேச்சுத் திறமையால் பலரை மயக்கிய இவர் முகநூல் மூலம் ஏராளமான பெண்களின் செல்போன் எண்களை பெற்றுள்ளாராம்.

வீடியோ
அவ்வாறு தனது வலையில் விழும் இளம்பெண்களை மயக்கி அவர்களை சொகுசு காரில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று அங்கு தனிமையான இடத்தில் பாலியல் சில்மிஷங்களை செய்வார். அவ்வாறு செய்யும்போது அதை மற்ற 3 நண்பர்களும் சேர்ந்து வீடியோ எடுத்து விடுவர்.

மிரட்டல்
பின்னர் இந்த வீடியோவை காட்டி அந்த பெண்களை மிரட்டியே சின்னம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு வரவழைப்பார். அங்கு வந்தவுடன் கும்பலாக சேர்ந்து பலாத்காரம் செய்து அதையும் வீடியோவாக எடுத்து அந்த பெண்களை மிரட்டியுள்ளனர்.

தோழி குறித்து விசாரணை
இவ்வாறு இவர் பல பெண்களுடன் பழகுவதற்கு இவரது தோழி ஒருவர் காரணம் என சொல்லப்படுகிறது. அவர்தான் தனக்கு தெரிந்த இளம்பெண்களின் செல்போன் எண்களை வழங்கியதாக கூறப்படுகிறது. பல பெண்களின் வாழ்க்கையில் புயல் வீச இந்த பெண்ணும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications