ரூட் தல மோதலில் ஈடுபட்ட மாணவர் கைகள் திடீரென உடைந்தது எப்படி? போலீசுக்கு திமுக சரவணன் சரமாரி கேள்வி
Recommended Video
சென்னை: சென்னையில் குறிப்பிட்ட பஸ், ரயில் ரூட்களில் யார் தலைவராக இருப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் நடு ரோட்டில் வீச்சரிவாளை வைத்து வெட்டி தாக்குதல் நடத்திய மாணவர்கள் கை உடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரூட் தலையாக யார் இருப்பது என்பது தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புது கல்லூரி மற்றும் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம்.
இதேபோல சம்பவத்தன்று மதியம் கல்லூரி முடிந்ததும், திருவேற்காடு செல்லும் (தடம் எண் 29 இ) மாநகர பேருந்தில் சில மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அரிவாள் வெட்டு
மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் பைக்குகளில் அரிவாளுடன் விரட்டி சென்று, அரும்பாக்கம் மெகா மார்ட் ஷோரூம் அருகே பைக்கை மறித்து, டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மாணவர் கும்பல் பஸ்சில் இருந்த 7 மாணவர்களை கீழே இறங்கும்படி அரிவாளை காட்டி மிரட்டினர்.
சாலையில் இழுத்து போட்டு 7 மாணவர்களையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மக்கள் பீதியில் உறைந்து போயினர்.

சிசிடிவி காட்சிகள்
தகவலறிந்த, அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிசிடிவி காமிரா வீடியோக்களை ஆய்வு செய்து, அதில் பதிவான வாகனங்களின் பதிவெண்களை வைத்து 3ம் ஆண்டு மாணவர்கள் மதன், ஸ்ருதி, ரவீந்திரன், ராகேஷ் ஆகிய 4 மாணவர்களை கைது செய்தனர்.
|
காவல்துறை பொறுப்பு
இந்த நிலையில் போலீஸ் கைது செய்த மாணவர்கள் கைகள் முறிபட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு காவல்துறை பொறுப்பு என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை குற்றம் சாட்டியுள்ளார். "நேற்றைய அரிவாள் வெட்டு சம்பவத்தில், ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் கைகள் இன்று முறிக்கப்பட்டுள்ளது, கீழே விழுந்து கையை உடைத்து கொண்டார்கள் என்கிறது தமிழக காவல் துறை. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகளுக்கு என்ன நடந்தாலும் காவல்துறை தான் பொறுப்பு. அப்பட்டமான மனித உரிமை மீறல்!" இவ்வாறு அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
|
கோர்ட் எதற்கு
போலீஸ் தண்டனை கொடுப்பதற்கு நீதிமன்றங்கள் தேவையில்லை, யாருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என நம் சட்டம் சொல்கிறது! எந்த சட்டம் குற்றவாளியின் கையை உடைக்க சொல்கிறது? நாளை மஞ்சள் கோட்டை தாண்டி நிறுத்தினால், போலீஸ் காலை உடைத்தால் சரிதானென்று சென்று விடலாமா?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications