ரவுடி பேபி சூர்யா மீது 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு.. யூடியூபரை செருப்பால் அடித்ததால் சிக்கல்
சென்னை: மதுரையை சேர்ந்த யூடியுபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Recommended Video
மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் சிக்கா என்ற சிக்கந்தர். யூடியூப்பில் பிரபலமாக இருந்து வருகிறார்.
கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி என்பவர் தனது ஆண் நண்பருடன் வந்து சிக்கந்தரை வழிமறித்துள்ளார்.

பைக்கை மறித்து செருப்பால் தாக்குதல்
பைக்கை நிறுத்தியதும், சிக்கந்தரை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து அதனை தங்களது யூடியூப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாறி மாறி குற்றச்சாட்டு
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில், சிக்கந்தர் மற்றும் சூர்யாதேவி இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளிக்க சிக்கந்தர் முடிவு செய்துள்ளார்.

போலீசில் புகார்
சூர்யாதேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சிக்கந்தர் நேற்றைய தினம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சூர்யா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
அதன் அடிப்படையில் சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு சூர்யாதேவியுடன் வந்த ஆண் நண்பரை தேடிவருகின்றனர்.

ஆபாச வீடியோக்கள்
இதனிடையே சிக்கந்தரும், சூர்யாதேவியும், செருப்பால் மாறி மாறி தாக்கிகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் இது போன்ற ஆபாச பேச்சுகள் , வீடியோக்களை பதிவிடும் நபர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவை
பப்ஜி மதன் என்ற யூடியூபர் ஆபாசமாக பேசி சாட்டிங் செய்ததாகத்தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், பல்வேறு பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் பச்சை பச்சையாக ஆபாசமாக பேசி இப்போதும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். யூடியூப் வீடியோ தளத்தில் இது அதிகமாகத் தென்படுகின்றன. ஆனால் மதன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த காவல்துறை இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன் என்ற கேள்விகளை, பலரும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கிறார்கள்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications