ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதை வழக்கில்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்! யார் இந்த புது பெண்? மாட்டிக்கிட்டாரே!
சென்னை: சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் கொக்கைன் கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினரான நைஜீரியாவைச் சேர்ந்த பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். 41 வயதான சாராஹ் குமாமா என்ற இந்த பெண் ஹேப்பினஸ்/பிளஸ்ஸிங்ஸ் என்ற பெயர்களில் அறியப்படுகிறார்.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் போன் ஆதாரங்கள், வாக்குமூலங்கள் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கும்பல் கைதுகள்
முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இரண்டு நைஜீரிய நாட்டவர்கள் உட்பட 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் சர்வதேச கடத்தல்காரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய போதைப்பொருள் ராக்கெட்டாக உருவெடுத்துள்ளது. இந்த கும்பலின் தொலைபேசி அழைப்பு பதிவுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மேலும் பல தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வலையமைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபத்திய கைதுகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முழுமையாக ஒழிக்கும் வரை அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணா கைது
நடிகர் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் நடிகர் கிருஷ்ணா இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கெவின் என்ற நபரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கானா நாட்டிலிருந்து போதைப் பொருள் இறக்குமதி செய்யும் அளவுக்கு இந்த வலையமைப்பு பெரிய அளவில் நீண்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் ஒரு கடுமையான குற்றமாகும். இந்திய சட்டத்தின் கீழ், போதைப்பொருள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. போதைப்பொருட்களின் உற்பத்தி, விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீப காலமாக, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது ஒரு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதால் தனிநபர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இழக்க நேரிடுகிறது, மேலும் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் இது வழிவகுக்கிறது.
போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போலீஸ் அறிக்கை
இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2025ம் தேதி அன்று மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2-வது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார், கானா நாட்டைச்சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரும், போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் வெளியிட்ட லிஸ்ட்
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகளையும், தேடப்பட்டு வந்த நிலையில், தொடர் புலன் விசாரணையின் நிகழ்வாக, அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் பேரில் ஜெஸ்வீர் (எ) கெவின் என்பவர் இன்று ( 26.06.2025) ம் தேதி (1) Cocaine 1/2 Grams, 2)Methamphetamine-10.30 Grams, 3)MDMA 02.75 grams, 4) OG Ganja 2.40 grams, 5) Ganja 30 grams, 6) OC Paper 40 grams, 7) Ziplock Cover-40 Grams, 8) Weight Machine Small -2, 9) laptop -1, 10) Cellphone-1, 11) Rs.45,200 கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீகிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் WhatsApp குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள். விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும், மற்றவர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தும். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications