மறந்து விடாதீர்.. மறந்தும் இருந்துவிடாதீர்.. ஜன.19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.

1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காகக் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
சென்னையை பொறுத்தளவில், பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.03 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறதாம். இந்த பணிகளுக்காக, 1,645 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் போலியோ சொட்டு மருந்து போட முடியாவிட்டால், அடுத்தடுத்த நாட்களில், வீடுகளுக்கே களப் பணியாளர்கள் நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு அதிகாரிகள் மூலம், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications