Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. மாறி மாறி கை காட்டும் அரசியல் கட்சிகள்.. சீமான் சொல்றத பாருங்க!

வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவது சீமான் மற்றும் பாஜக தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த சர்ச்சையைக் கிளப்புவது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் என விமர்சித்துள்ளார்.

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. பொய்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

வட மாநில தொழிலாளர்கள்

வட மாநில தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக ஊடகங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள், காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். இதற்கிடையே தொழிலாளர்கள் அச்சத்தில் இருப்பதால் அவர்கள் சொந்த ஊர் திரும்ப முயல்வதாகவும் தகவல் பரவிய நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் ஹெல்ப் லைனுக்கு அழைக்கலாம் என கட்டுப்பாட்டு மையத்தையும் அமைத்து, திருப்பூர் உள்ளிட்ட வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது காவல்துறை.

திமுக vs பாஜக

திமுக vs பாஜக

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. ஆளும் திமுக அரசு தான் பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அண்ணாமலை மீது, வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவே வட மாநிலத்தவர் விவகாரம் தொடர்பாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

பாஜக, காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜக, காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதுஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சி பாஜகவையும், நாம் தமிழர் கட்சியின் சீமானையும் குற்றம்சாட்டியுள்ளது. இவர்கள் இருவரும் தான் வட மாநிலத்தவர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நேற்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார். அவர்களது பேச்சுகளே, வட மாநிலத்தவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகளை வைத்தார்.

காங்கிரஸ் அட்டாக்

காங்கிரஸ் அட்டாக்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வட மாநில தொழிலாளர்கள் குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் மறைமுகமாக செய்கிறார்கள். சீமான் வெளிப்படையாக செய்கிறார். இவர்கள் இரண்டு பேர்தான் காரணம். சீமான் தன்னுடைய விளம்பரத்திற்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் வட இந்தியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்று செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு மாநிலம், சாதி, மொழி வேறுபாடு கிடையாது. அவர்களுக்கு கை உண்டு, கால் உண்டு, வயிறு உண்டு.

நாம் சும்மா இருப்போமா

நாம் சும்மா இருப்போமா

ஒருவேளை சோற்றுக்காக இங்கே உழைக்க வருகிறார்கள். சீமான் பேச்சு அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது. சிங்கப்பூர் போன்ற இடங்களில் நம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக எதாவது நடந்தால், நாம் சும்மா இருப்போமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னதுதான் தமிழ் மரபு. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக அம்பு எய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு 10 ஆண்டுகளாக சீமான் தான் காரணம்." என விமர்சித்தார்.

நாம் தமிழர் கொந்தளிப்பு

நாம் தமிழர் கொந்தளிப்பு

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே வழி சீமானை கைது செய்வதுதான் என்று தெரிவித்துள்ளார். வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சீமானை நேரடியாக கைது செய்ய வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளது நாம் தமிழர் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் தான் - சீமான்

காங்கிரஸ் தான் - சீமான்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல சர்ச்சையை திமுகவும், காங்கிரஸும் திட்டமிட்டு பரப்பி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சையை தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என விமர்சித்துள்ளார். இவ்வாறாக, அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+