Special Trains: பொங்கல் பண்டிகைக்கு 40 சிறப்பு ரயில்கள்.. பயணிகளே ரெடியாக இருங்க! இன்ப அதிர்ச்சி தரப்போகும் ரயில்வே
சென்னை: Pongal Special Trains (பொங்கல் சிறப்பு ரயில்கள்): பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 40 ரயில் சேவைகளை கூடுதலாக இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், சிறப்பு ரயில்களை பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது பொங்கல்தான்.

பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகைக்கு குறைந்தது மூன்று நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும். ஜனவரி 2026 பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. அதற்கு அடுத்து ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை வருகிறது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரை நகரங்களை விட கிராமங்களில்தான் கொண்டாட்டம் களை கட்டும்.
இதனால், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு மறக்காமல் சென்று விடுவார்கள். இதனால், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று கொண்டாட திட்டமிட்டு இருக்கும் மக்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
ரயில்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
ரயில்களைப் பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. அரசு பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நாளே பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.
பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்று விட்டன. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுடன் பயணிக்கும் பயணிகள் ரயில்களில் செல்வதையே விரும்புவார்கள். இதனால், டிக்கெட் ஓபன் ஆன சில நிமிடங்களில் போட்டிபோட்டுக் கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து விட்டனர்.
எப்போது அறிவிக்கப்படும்
நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர், செந்தூர், உழவன் என அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் ஹவுஸ் புல் ஆகிவிட்டன. இதனால் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
வழக்கமாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை சமயத்தில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் தங்கள் பயண திட்டத்தை வகுக்க சிறப்பு ரயில்களை ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளை வெளியாகும் அறிவிப்பு
அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாளில் சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என்று பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
40 சிறப்பு ரயில்கள்
அதேபோல, சென்னை - திருச்சி, மதுரைக்கு கூடுதல் மெமு ரயில்களை அறிவித்தால் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர். தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 40 ரயில் சேவைகள் வரை இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், தெற்கு ரயில்வே வெளியிட உள்ள இந்த அறிவிப்பை பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து மட்டும் சுமார் 15 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரயில்கள் மூலம் மட்டும் சுமார் 7 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் எனத் தெரிகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications