சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை போறீங்களா.. நோட் பண்ணுங்க
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் சென்னையில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரைக்கு சனிக்கிழமை (ஜனவரி 11 ஆம் தேதி) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 2025 புத்தாண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. அதற்கடுத்த நாள் ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், ஜனவரி 16 ஆம் தேதி உழவர் நாள் கொண்டப்படுகிறது. ஜனவரி 17 ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பொங்கல், கரும்பு, புத்தாடை, நீண்ட நாள் விடுமுறை, வீர விளையாட்டுகள் என ஊரே களைகட்டி இருக்கும். எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் பண்டிகை என்றால் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.
வெளியூர்களில் கல்வி, வேலைக்காக வசித்து வரும் பலரும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களின் மூலமாக சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் தொடர் விடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல், ஆயூத பூஜை போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கத்தை அறிவிப்பது வழக்கம்.
அந்த வகையில், சென்னையில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06101) மறுநாள் பகல் ஒரு மணிக்கு திருநெல்வேலி சென்றடையவுள்ளது. மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயிலில் இரண்டு ஏசி கிளாஸ் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லவுள்ளது.
அதேபோல, நாகர்கோவிலுக்கு தாம்பரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண் 06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 9.20 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அதே நாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மதுரைக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06067) திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.
மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 9.20 மணிக்குசென்ட்ரல் வந்தடையும். இதில் 11 ஏசி வகுப்பு பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 8 முன்பதிவில்லாப் பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications