பொங்கல் பரிசு ரூ.3000 பயனாளிகளுக்கு.. மக்கள் ஏமாறுவாங்கன்னு நினைக்கறீங்களா: டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: "21 வருட காலமாக எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. இதனால் இறந்தவர்கள் அனைவரும் திமுககாரர்களால் எழுந்து வந்து ஓட்டு போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் இப்போது எஸ்ஐஆர் பணி முடிவடைந்து விட்டால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிடுவார்கள். அதனால் தான் ஸ்டாலின் கதறுகிறார், பதறுகிறார்" என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தன்னுடைய கருத்தையும் தற்போது தெரிவித்துள்ளார்.
ஜனவரி 7ம் தேதிக்கு பிறகுதான் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி கூறிவருகிறார்..

சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பங்கு பெறும் அளவில்தான் எங்கள் கூட்டணி அமையும், அமைச்சரவையில் பங்கு பெற்றால்தான் மக்களின் குறைபாடுகளை நீக்க முடியும் என்றும் கிருஷ்ணசாமி கூட்டணி நிலைப்பாட்டை பதிவிட்டு வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், திமுக மீதான அவரது குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடியே உள்ளன.. மேலும், பீகார் மாடலில் தமிழகத்திலும் ஆட்சி அமைய வேண்டும், கூட்டணி அமைச்சரவை அமைய வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் ஆட்சி அமைய வேண்டும் என்று தொடர்ந்து திமுக அரசை வலியுறுத்தி வரும் கிருஷ்ணசாமி, தற்போது எஸ்ஐஆர் மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை மீண்டும் விமர்சித்துள்ளார்.
ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க தொடக்க விழாவில் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்..
திருடனுக்கு தேள்
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "போக்குவரத்துத் துறையில் பல்வேறு குளறுபடிகள், ஊழல்கள் நடக்கின்றன. இருக்கும் துறைகளிலேயே போக்குவரத்துத் துறையில்தான் அதிகப்படியான ஊழல்கள் நடக்கின்றன.
திருடனுக்கு தேள் கொட்டியது போல் எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அமைதியாக இருக்கின்றன. இதன் மூலம் எஸ்ஐஆர் நடவடிக்கை சரி என்பது தெளிவாகிறது. வெறும் அரசியல் காரணங்களுக்காகவே எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் என்ன தப்பு? இந்த விவகாரத்தில் தமிழக அரசு இவ்வளவு கடுமையாக நடந்திருக்க வேண்டியதில்லை. இது மதம் தொடர்பான பிரச்சினை இல்லை.
தீபம் ஏற்றுவது மண்ணின் மைந்தர்களின் உரிமை. தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசியல் செய்திருக்கக் கூடாது. தீபத்தூனை கிரானைட் தூண், எல்லைக் கல் என்று சொல்லிவிட்டு, எதையுமே நிரூபிக்க முடியாத நிலையில் இப்போது அரசு உள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு யாரோ தவறாக வழிகாட்டி கொண்டிருக்கிறார்கள்.. இப்போது இந்த விவகாரத்தில் ஏன் தலையிட்டோம் என்ற நிலையில் அரசு உள்ளது. தீபத் தூணில் தீபம் ஏற்றும் உரிமை அனைவருக்கும் உள்ளது... திமுக அரசு பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் தந்தாலும் மக்கள் கண்டிப்பாக ஏமாற மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் தவறான நெறி
ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி, "நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், அரசியல் நோக்கத்தோடு 144 தடை பிறப்பித்ததை ஏற்கவே முடியாது.. கோயிலுக்கு சாதகமான உத்தரவை ஏற்றுக்கொண்டு இருந்தால் பிரச்சினை ஏற்படாதிருக்கும்..
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை என்ற அரசின் அணுகுமுறை தான் இந்த பிரச்சினையை பெரிதாக்கிவிட்டது.. முருகனை முதல் கடவுளாக மதிக்கும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு கருத வேண்டியது அவசியம்.. நீதிபதியை தரக்குறைவான முறையில் தவறான நெறி" என்றெல்லாம் காட்டமாக விமர்சித்தார்..
இந்நிலையில், திமுக அரசு பொங்கலுக்கு ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்" என்று கூறி திமுக அரசு மீது பாய்ந்துள்ளது, பலரது கவனத்தை பெற்று வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications