புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500! நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்த முடிவு
சென்னை: பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் தரப்படும். தமிழ்நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகள் மூலம் இந்த இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும்.

கடந்தாண்டில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கத்தைக் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தாண்டும் அதேபோன்ற ஒரு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
பொங்கல் பரிசு: இதற்கிடையே இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதவது பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மாநிலத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்தாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரூ. 238.92 செலவில் தமிழக மக்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதேநேம் தமிழ்நாட்டில் இந்தாண்டில் ரொக்கம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தமிழ்நாட்டைப் போலவே புதுவையிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பரிசுத் தொகை: புதுவையில் கடந்த 2022ஆம் ஆண்டில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 10 பொருட்களைக் கொண்ட பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்குத் தரப்பட்டது. அதேநேரம் கடந்த 2023 ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதில் 470 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தத் தொகை நேரடியாகப் புதுச்சேரி மக்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே இந்தாண்டும் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
நேரடியாக வங்கிக் கணக்கிற்கு: இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதிலாக 500 ரூபாயை வழங்கத் புதுச்சேரி அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு சுமார் 3.53 லட்சம் பேருக்கு தலா 500 ரூபாய் வழங்கப் புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
அங்குள்ள 1.30 லட்சம் சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச ஆடைகளுக்குப் பதிலாக, நேரடியாக வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பைப் புதுவை அரசு வெளியிட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications