ஸ்டாலினின் அதிரடி.. பொங்கலுக்கு 2000 ரூபாய் வருதா? முதல்வர் தரப்போகும் பொங்கல் பரிசு தொகுப்பு இதுவா?
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது ரொக்கம் மற்றும் பொருட்கள், அல்லது ரொக்கம் என தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு: கடந்த 2021-ல் அதிமுக ஆட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் 2,500 ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.. இதற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை...
இந்த 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.. இந்நிலையில், விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை: இந்நிலையில், பொங்குல் பரிசு தொகுப்பு குறித்து ஒரு சில தகவல்கள் வட்டமடிக்க துவங்கி உள்ளன.. அதாவது, தற்போது மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டுவருகிறது. இந்த உரிமைத்தொகை வழங்குவதில் சில சலசலப்புகளும் அவ்வப்போது எழுந்தபடியே உள்ளது. தகுதியுள்ள அனைவருக்குமே 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.
ஆனாலும், எதிர்க்கட்சிகள் இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை விஷயத்தை வைத்து, அரசியல் செய்து வருகின்றன.. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், இதையே மையமாக வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன.. அதனால்தர்ன, கார்டுதாரர்களுக்கு வரும் 1000 ரூபாயுடன் கூடிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறதாம்.
1000 ரூபாய்: அதாவது, மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் அதிருப்தி நிலவுவதாலும், எம்பி தேர்தல் நெருங்குவதாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வரும் பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்கலாமா என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..
கடந்த முறை, திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில், கரும்பு மிஸ்ஸாகியிருந்தது.. இந்த விஷயத்தை அதிமுக, பாஜக கட்சிகள் கையிலெடுத்து, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தன.. இப்போது, 1000 ரூபாய்கு பதிலாக 2000 ரூபாய் வழங்குவதாக இருந்தால், இதை எதிர்க்கட்சிகள் எப்படி அணுக போகிறது என்பது தெரியவில்லை.
மகிழ்ச்சி தகவல்: ஒருவேளை, பொங்கல் பரிசு தொகுப்பில் 2000 ரூபாய் இடம்பெற்றால், தமிழக மக்களுக்கு இது மிகப்பெரும் தித்திப்பு தரும் செய்தியாகவே இருக்கும் என்கிறார்கள்.
இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை என்றாலும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியிருப்பதே, திமுக அரசுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும் என்றும், அரசு மீதான நம்பகத்தன்மை மக்களிடம் மேலும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஸ்டாலின் அதிரடி: ஆனால், இதற்கு நடுவில், திமுக அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்க முயற்சி எடுக்கப்படும்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்... பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று நம்பிக்கை தகவலை வெளியிட்டிருந்தது கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது..!!!












Click it and Unblock the Notifications