கலைஞர்போல் வருமா? தொழில்நுட்பத்தால் “எஸ்கேப்”ஆன பொன்னியின் செல்வன் -திமுக எம்பி அப்துல்லா விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வம் திரைப்படம் போர் அடிக்கவில்லை என்று தொழில்நுட்பத்தால் அந்த படம் தப்பியதே தவிர திரைக்கதையால் அல்ல என்று திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சத்யராஜ், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பெரும் பொருட்செலவில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன்.

ராஜராஜ சோழனினை வைத்து கல்கி எழுதிய புனைவு கதையான பொன்னியின் செல்வன் தமிழில் வெளியான நாவல்களில் பலராலும் விரும்பப்பட்ட ஒன்றாகும். எம்.ஜி.ஆர். படமாக்க விரும்பி முடியாமல்போன நிலையில் அதை மணிரத்னம் செய்திருக்கிறார்.

விவாதங்கள்

விவாதங்கள்

இந்த படத்தின் தயாரிப்பு தொடங்கியதில் இருந்து படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகள் வரை இயக்குநர், படத்தில் நாயகர்கள் என அனைவரும் இதை தமிழ் வரலாற்றின் பெருமை என்றும் தமிழ் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் எனவும் கூறி போற்றினர். படமும் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதே நேரம் பொன்னியின் செல்வம் திரைப்படம் விவாதத்தையும் எழுப்பி இருக்கிறது.

திமுக எம்பி அப்துல்லா

திமுக எம்பி அப்துல்லா

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்பி அப்துல்லா, "ஒரு வழியாக "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிப் பருவத்திலேயே படித்த நாவல். அதன் பிறகு நெடுந்தூர விமானப்பயணம் என்றால் மறக்காமல் எடுத்துச் சென்று படிப்பதும் அதே பொன்னியின் செல்வன் தான்! கொள்ளிடம் துவங்கி தஞ்சை வரை பயணிக்கும் போதெல்லாம் காட்சிகளாய் பொன்னியின் செல்வன் மனதில் விரியும்!

போர் அடிக்கல படம்

போர் அடிக்கல படம்

ஒருமுறை நானும் அண்ணன் ரவிச்சந்திரன் சோமுவும் பொன்னியின் செல்வன் நாவலின் வழியில் அந்த இடங்களுக்கெல்லாம் பயணிக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டோம்! ஆனால் அன்றைய சூழலில் இயலவில்லை. டெக்னாலஜி முன்னேறிய காலம் என்பதால் ரசிக்கும்படிதான் மணிரத்தினம் என்கிற மணி சார் எடுத்துள்ளார். பெரிதாக போர் அடிக்கவில்லை.

தொழில்நுட்பத்தால் தப்பியது

தொழில்நுட்பத்தால் தப்பியது

ஆனால் நாவலாகப் படிக்கும் போது ஒருவனின் மனக் கண்ணில் விரியும் காட்சியை ஒத்து இருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதில் ஆகும்! டெக்னாலஜியால் தப்பித்து இருக்கிறதே தவிர திரைக்கதையால் அல்ல!!! இந்த நேரத்தில் கலைஞரை நினைத்துப் பார்க்கிறேன்! தீவிர இலக்கியவாதிகளால் பிரச்சார எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்டவர் கலைஞர். பொன்னியின் செல்வனாவது வெறும் நாவல்.. ஆனால் சிலப்பதிகாரம் என்பது தமிழின் தனிப்பெரும் காப்பியம்!

கருணாநிதியின் பூம்புகார்

கருணாநிதியின் பூம்புகார்

டெக்னாலஜி இல்லாத அன்றைய காலகட்டத்தில் தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் வசனத்தால் அவ்வ்வ்வ்வ்ளவு பெரிய சிலப்பதிகாரத்தை பூம்புகார் என்ற இரண்டரை மணி நேர விறுவிறுப்பான படமாக்கி இரசிகர்களை சீட்டின் நுனியில் அமரச் செய்தவர் தலைவர் கலைஞர்!! இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் யாரும் அவர் அளவிற்கு உச்சம் தொட்டதில்லை. அவரும் இலக்கிய "போதையில்" உளறும் எவர் விமர்சனம் குறித்தும் கவலைப்பட்டதும் இல்லை!!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+