தமிழக அமைச்சரவையில் அதிரடி.. துரைமுருகன் இலாகா மாற்றம்..ரகுபதிக்கு கனிமவள துறை ஒதுக்கீடு
சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகனின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் ரகுபதியின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நீர்வளம் மற்றும் கனிவளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனிடன் இருந்து கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கும், ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் இலாகா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
* ஏற்கனவே 2009 - 2011 ஆம் ஆண்டுகளில் துரைமுருகன் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
* நீர்வளத்துறையுடன் சேர்த்து இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் கவனிப்பார்.
* கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில், தற்போது அவரது இலாகா மாற்றப்பட்டுள்ளது. இனி கனிமவளத்துறை அமைச்சராக ரகுபதி நீடிப்பார்.
தமிழக அமைச்சரவையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை அடுத்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்துவிலகினார். அதெபோல பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக மனோ தங்கராஜ் புதிதாக சேர்க்கப்பட்டார்.
செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் அதிரடியாக இலாகா மாற்றப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications