மாதம் 2,000 கட்டினால் போதும்.. 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? போஸ்ட் ஆபீசின் செம திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் விதமாக குறைந்த முதலீட்டில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. ரூ.100 முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை என்றாலும் சேமிக்க முடியும். இதில் மாதம் ரூ.2 ஆயிரம் கட்டினால் 5 வருஷத்தில் எவ்வளவு தொகை நமக்கு கிடைக்கும் என்றும், வட்டி எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றியும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு ஒன்று தான், வரும் காலத்தை செழிப்பாக கொண்டு செல்ல உதவும். எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் ஒரு பங்கை சேமிப்புக்கு எடுத்து வைத்தால்தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை சரியான வகையில் முதலீடு செய்வதன் மூலம், மிகப்பெரிய பலனை அடையலாம்.

Post Office Savings Scheme Central Govt

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ஆபத்து இல்லாத முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனினும், போஸ்ட் ஆபீசின் சிறு சேமிப்பு திட்டங்கள் என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரிய பலனை தரும் ஒன்றாக உள்ளது. நம்பிக்கை அளிக்கும் வகையில் லாபத்தை தரும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களை நம்முடைய அஞ்சலகங்கள் செயல்படுத்தி வருகின்றன.

செய்யும் முதலீடு பாதுகாப்பானது. சரியான நேரத்தில் பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எப்போதுமே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் முன்னணி சேமிப்பு திட்டமாக உள்ளது. 18 - வயது நிரம்பிய இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ரூ.100 முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை என்றாலும் சேமிக்க முடியும். போஸ்ட் ஆபீசில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் விதமாக குறைந்த முதலீட்டில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைப் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். போஸ்ட் ஆபீசில் ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.2 ஆயிரம் முதலீடு செய்தால் போதும். ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.1,42,732 பணம் முதிர்வு தொகையாக திரும்ப கிடைக்கும். அதாவது 6.7 சதவிகித வட்டி இதற்கு கிடைக்கும்.

இந்த ஆர்டி சேமிப்பு திட்டத்தில் 18-வயது நிரம்பியவர்கள் யார் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கி பணத்தை முதலீடு செய்யலாம். லோன் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. அதாவது 12 மாதங்களுக்கான தவணையை கட்டிய பிறகு அல்லது ஒரு ஆண்டு கழித்து இந்த தொகையில் இருந்து கடன் பெறலாம். அக்கவுண்டில் உள்ள 50 சதவிகித தொகையை லோன் ஆக எடுக்க முடியும். இந்த கடனை மொத்தமாகவோ அல்லது மாத தவணையாகவும் திரும்பி செலுத்தலாம்.

இதற்கு வட்டி 2 சதவீதம் இதற்கு உண்டு. பணத்தை திரும்ப எடுத்த நாளில் இருந்து வட்டி செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்தாவிட்டால் முதிர்வு தொகையில் இருந்து பணம் கழித்துக்கொள்ளப்படும். சம்பாதிக்கும் பணம் செலவுகளுக்கே சரியாக இருக்கிறது. பெரிய அளவில் மாதம் தனியாக எடுத்து வைக்க முடியாது என கருதுபவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தக் கூடிய இந்த RD சேமிப்பு திட்டம் கை மேல் பலன் கொடுப்பதாக இருக்கும்..

அதேபோல மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ. 3,56,830 திரும்ப கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டும் 56,830 கிடைக்கும். மாதம் 3 ஆயிரம் செலுத்தும் திட்டத்தில் சேர்ந்தால் 5 ஆண்டுகள் கழித்து ரூ.34,097 வட்டி தொகையுடன் மொத்தமாக ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 097ஐ முதிர்வு தொகையாக பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+