அஞ்சல் சேமிப்பில் அசத்தல்.. ரூ.340 டெபாசிட் செய்தால், 7 லட்சம் ரிட்டன்.. போஸ்ட் ஆபீஸ் திட்டம் லாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஞ்சல் சேமிப்பை பலரும் வரவேற்க என்ன காரணம்? தினமும் ரூ. 340 முதலீடு செய்தால், ரூ. 1700000 கிடைக்கும் சூப்பரான ஆர்.டி. போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா? ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் ஆர்டி திட்டத்தின் பலன்கள் என்னென்ன? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? இந்த திட்டத்தின் மூலம் யார் யார் பலன் பெறலாம்? இந்த திட்டத்தில் கணக்கு துவங்க பலரும் ஆர்வம் காட்டுவது ஏன்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

நாம் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்தாலே, வாழ்நாளில் பெருவாரியான பணப்பிரச்சனைகளை சமாளித்து விடலாம்.. அப்படியொரு உத்திரவாதமான லாபத்தை பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தருகின்றன..

Post Office Scheme RD savings

தபால் சேமிப்பு

இதற்கு காரணம், தபால் சேமிப்பில் முதலீடு செய்வது பாதுகாப்பை முழுமையாக தருகிறது.. அந்தவகையில் தபால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பொதுமக்களின் வரவேற்பை பெற்றது, RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டமாகும்.. உத்தரவாதத்துடன், நல்ல லாபத்தையும், நிலையான வட்டியையும் இந்த திட்டம் தருகிறது.

தினந்தோறும் ரூ.340 முதலீடு செய்தால், ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதத்தை இந்த திட்டம் வழங்குகிறது., இந்த வட்டியானது, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கில் சேர்க்கப்படுவதே இத்திட்டத்தின் ஸ்பெஷாலிட்டியாகும்.

ரூ.100 முதலீடு - ரூ.340 சேமிப்பு

ஆர்டி என்று சொல்லப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில், மாதம் ரூ.100 முதலீடு செய்து உங்கள் கணக்கை திறக்கலாம்.. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும்.. தேவைப்பட்டால் மேலும், 5-5 வருடங்களுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்று எதுவுமே இதில் கிடையாது.

அதுமட்டுமல்ல, ஒரு வருடத்துக்கான தவணைகளை முடித்திருந்தால், 50 சதவீதம் கடன் வசதியும் உண்டு.. இந்த கடனுக்கான வட்டியும் குறைவு... RD முதிர்ச்சி அடையும் வரை நீங்கள் அதை திருப்பி செலுத்தலாம்.

யார் யார் இணையலாம்

வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் என யார் வேண்டுமானாலும், இந்த திட்டத்தில் இணையலாம்..

போஸ்ட் ஆபிஸ் RD கணக்கை துவங்க வேண்டுமானால் ஆதார் கார்டு, பான் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ இருந்தாலே போதும்.. ஆன்லைனிலும் அக்கவுண்ட்டை திறக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்திருக்க வேண்டும். அப்போதுதான், வட்டியின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.

அஞ்சல் சேமிப்பு திட்டம்

தனியாக அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட்டும் தொடங்கலாம்.. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரிலும் அக்கவுண்ட் ஆரம்பிக்கலாம்..

குழந்தைகளின் கல்வி, சொந்த வீடு வாங்குவது, பிற்காலத்தில் நிதி பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு, இந்த திட்டம் மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது.. எனவேதான், பெரும்பாலானோர் எளிய மற்றும் பாதுகாப்பான வழிக்காக, இந்த தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத்தொகை (RD) திட்டத்தை நாடுகிறார்கள்.

சேமிக்க விரும்பும் பலருக்கும் தபால் அலுவலக திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும், குறைந்த அளவில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெற ஆர்டி திட்டம் சிறந்ததாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+