சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குருமூர்த்தி.. எடப்பாடிக்கு ஆதரவாக ஒரு பவர் பாஜகவில் வேலை செய்யுது! புட்டு புட்டு வைத்த எக்ஸ்பெர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நேற்று டெல்லியில் ஜி 20 கூட்டமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பாக, இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டார். இந்த மீட்டிங்கிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடியை சந்தித்தார். இது தனிப்பட்ட சந்திப்பு கிடையாது. மாறாக பிரதமர் மோடி அங்கு இருந்த முதல்வர்கள், கட்சி தலைவர்கள் எல்லோரையும் சந்தித்து பேசினார். இவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். எடப்பாடியிடமும் உடல்நலன் குறித்து விசாரித்தார்.

எடப்பாடிக்கு வழங்கப்பட்ட இந்த திடீர் மரியாதை தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

ஸ்டாலினை நோக்கி நகரும் அன்புமணி.. அப்ப திருமாவளவன்?.. திமுக அந்த கட்சியை விடாது: ரவீந்திரன் துரைசாமிஸ்டாலினை நோக்கி நகரும் அன்புமணி.. அப்ப திருமாவளவன்?.. திமுக அந்த கட்சியை விடாது: ரவீந்திரன் துரைசாமி

பேட்டி

பேட்டி

கேள்வி; டெல்லி ஜி 20 கூட்டத்திற்கு எடப்பாடி சென்றுள்ளாரே? பாஜக எடப்பாடியை அங்கீகரிக்கிறதா?

பதில்: இந்த அழைப்பு எடப்பாடிக்கு ஒரு பூஸ்ட். அந்த லெட்டரிலேயே எம்பிக்கள் உள்ள கட்சி தலைவருக்கு அழைப்பு என்றுதான் கூறி உள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் இப்போதும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளன. ஓ பி ரவீந்திரநாத் குமார் , தர்மர் ஆகியோர் எம்பிக்களாக இருப்பதால், ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். எம்பிக்கள் உள்ள பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் எடப்பாடிக்கு கொடுத்துள்ளனர். அப்படி என்றால் பாஜகவில் எடப்பாடிக்காக ஒரு சக்தி வேலை செய்கிறது.

மறுக்கவில்லை

மறுக்கவில்லை

அதை நாங்கள் மறுக்கவில்லை. எடப்பாடிக்கு ஆதரவாக ஒரு சக்தி இருக்கிறது. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று சொன்னவர் யார்? சொன்ன ஒரே ஒரு நபர் யார்? துணிச்சலாக சசிகலாவை அதிமுகவில் எதிர்த்தது யார்? சசிகலாவை கூட சேர்க்காமல் எடப்பாடி இருக்கிறார். இப்போது டெல்லியில் நடந்த கூட்டம் என்பது எடப்பாடிக்கு பூஸ்ட்தான். ஆனால் இதுதான் இறுதி என்று சொல்ல முடியாது. இதுதான் கிளைமேக்ஸ் என்று சொல்ல முடியாது. போக போக என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

என்ன சொல்ல முடியும்

என்ன சொல்ல முடியும்

கேள்வி: அப்படி என்றால் எடப்பாடியை மோடி ஏற்றுக்கொண்டார் என்று சொல்ல முடியுமா?

பதில்: அதே மோடிதான் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை ஒன்றாக சந்தித்தார். இவர்களை சமமாக நடத்தினார். இப்போது எடப்பாடியை டெல்லி வர வைத்துள்ளனர். இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்து உள்ளது. ஒருமுறை அண்ணாமலை எடப்பாடி பற்றி பேசிய போது, அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் விமர்சனம் வைத்தனர். எடப்பாடி மெகா கூட்டணி என்று சொல்வது 2019ல் நடந்த இரட்டை தலைமை அதிமுக - பாஜக - பாமக - ஏசி சண்முகம் - வாசன் - கிருஷ்ணசாமி ஆகியோர் இருந்த கூட்டணியை எடப்பாடி சொல்லவில்லை. எடப்பாடி சொல்வது விசிக, காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணி. 2019 மெகா கூட்டணி பெரிதாக ஜெயிக்கவில்லை.

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

2019ல் அதிமுகவின் மெகா கூட்டணியில் பாஜக இருந்ததால், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகள் திமுகவிற்கு சென்றுவிட்டது, அதேபோல் பாமக இருந்ததால் தலித் வாக்குகள் திமுகவிற்கு சென்றுவிட்டது. இந்த கணக்கைதான் எடப்பாடி பழனிசாமி போட்டுள்ளார். அதனால் இப்போது புதிய மெகா கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்துள்ளார். எடப்பாடி சொல்வது விசிக, காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணி. எடப்பாடியின் திட்டம் இதுதான். இப்படி அமைத்தால்தான் திமுகவை சமாளிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

திருமாவளவன்

திருமாவளவன்

ஆனால் திருமாவளவன், காங்கிரஸ், பாமக எதுவும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவை நம்பவில்லை. கூட்டணி வைக்க விரும்பவில்லை. உங்களுக்கு ஏகோபித்த வரவேற்பு இல்லை என்று எடப்பாடியிடம் திருமாவளவன், காங்கிரஸ், பாமக கட்சிகள் சொல்லி வருகின்றன. இதனால் பாஜகவை மீறி எடப்பாடி மெகா கூட்டணி அமைப்பதே கஷ்டம். இந்த நிலையில்தான் எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து உள்ளனர். பாஜகவில் எடப்பாடி ஆதரவாளர்களும் உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் உள்ளனர். சசிகலாவிற்கு கூட ஆதரவான ஆட்கள் இருக்கிறார்கள். குருமூர்த்தி கூட சசிகலாவை பற்றி பேசவில்லையா.. ஸ்டாலினை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சசிகலாவிற்கு ஆதரவாக பேசவில்லையா?

ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி

சசிகலாவை குறைத்து மதிப்பிட கூடாது. சர்வதேச அளவில் சசிகலாவிற்கு ஆதரவு இருந்தது. தேசிய அளவில் சசிகலாவிற்கு ஆட்கள் இருந்தது. அதே போல் எடப்பாடியையும் குறைத்து மதிப்பிட கூடாது. அவருக்கு ஒரு 15 சதவிகிதம் வாக்குகள் உள்ளன. பாஜகவில் எடப்பாடிக்கு ஆதரவாக ஆட்கள் இருக்கிறார்கள். அவருக்கு என்று ஒரு குழு இருக்கிறது. அவருக்கு என்று லாபி இருக்கிறது. 2024ல் அவரின் பலத்தை பார்க்க முடியும், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

English summary
A power is supporting Edappadi Palanisamy in BJP says Raveendran Duraisamy in Oneindia Arasiyal interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X