சென்னை புறநகரில் இன்று பல இடங்களில் நோ மின்சாரம்.. 5 மணி நேரம் மின்வெட்டு இருக்கும்! கவனம் மக்களே
சென்னை: வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் சென்னை புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்படும். சென்னை புறநகரில் உள்ள இந்த முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒரு சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் சப்ளை துண்டிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இந்த பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கும்.

அதன்படி சென்னை புறநகரில் பல இடங்களில் மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. அதன்படி ரெட் ஹில்ஸ் அதாவது செங்குன்றம், அம்பத்தூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால் அதற்கேற்ப மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரெட் ஹில்ஸ் பகுதியில் பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பகா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர் மின்சாரம் இருக்காது. அதேபோல அம்பத்தூர் பகுதியில் எஸ்&பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலை, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ்&பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி ஃபேஸ் I & II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, எருளார் காலனி, எட்டீஸ்வரன் கோயில் தெரு செட்டி பிரதான தெரு பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
மேலும், செம்பரம்பாக்கம் பகுதியில் முழு நசரத்பேட்டை பகுதி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூரு டிரங்க் சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் பகுதி, அகரம்மேல் பகுதியில் மின்சாரம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications