Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணியின் கெத்து சிரிப்பு.. எரிச்சலான விசிக.. விருதாச்சலத்தில் முகம் மாறிய பிரேமலதா.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருத்தாசலம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்ற பிரேமலதா விஜயகாந்துக்கு எதிர்பாராத முறையில் பதற்றமான சூழ்நிலை உருவானது.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது..திருமாவளவன் தொடர்பான சர்ச்சை பின்னணியில் இருந்த இந்த சம்பவம், களத்தில் புதிய அரசியல் திருப்பத்தை உருவாக்கியுள்ளது.. என்ன நடந்தது விருதாச்சலத்தில்?

கடலூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் "அண்ணியார் பிரேமலதா" என்று பெயரை அழைத்தபோது அவர் எழுந்து நின்று மரியாதை செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே சிரித்தது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

Vriddhachalam Election Campaign 2026 Premalatha Vijayakanth Thol Thirumavalavan VCK vs DMDK VCK Cadres Protest Premalatha Smile Controversy Tamil Nadu Assembly Election 2026 Kandappankurichi Chaos Political Viral Video VCK District Secretary Neethivallal DMDK Campaign News Tamil Nadu Assembly Election 2026 Tamil Nadu election 2026 2026

இதனால் அதிருப்தியடைந்த வி.சி.க தொண்டர்கள் பிரேமலதாவை விமர்சிக்க துவங்கினார்கள்.. இதையடுத்து, இதற்கு செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் தந்தார்.

பிரேமலதா - திருமாவளவன்

நானும், திருமாவளவனும் மக்கள் நலக் கூட்டணி காலத்திலிருந்தே குடும்ப நண்பர்களாகப் பழகி வருகிறோம். கேப்டன் விஜயகாந்த் தான் திருமாவளவனின் 'வெளிச்சம்' தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார்.. திருமாவளவனே இந்த விவகாரம் குறித்து போனில் என்னிடம் பேசி வருத்தம் தெரிவித்தார்.. தேமுதிக மற்றும் விசிக இடையே இருக்கும் ஆழமான நட்பைப் புரிந்துகொள்ளாமல் வீண் சர்ச்சைகளை உருவாக்கி உப்புசப்பு இல்லாத விஷயத்தை பெரிதாக்குகிறார்கள் என்றார்.

அதேபோல் திருமாவளவனும், அண்ணியார் இயல்பாகத்தான் சிரித்தார் என்றும், ஊடகங்களும் எதிர்க்கட்சிகளுமே இதனைத் திட்டமிட்டு பெரிதாக்குவதாகவும் தெரிவித்ததுடன், விரைவில் விருத்தாச்சலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் தங்கள் நட்புறவு மீண்டும் வெளிப்படும் எனக்கூறி இந்த விவகாரத்திற்கு எண்ட் கார்டு போட்டார். .

விசிக தொண்டர்கள் ஆக்ரோஷம்

இப்படி பிரேமலதா மற்றும் திருமாவளவன் ஆகிய 2 தலைவர்களும் முற்றுப்புள்ளி வைத்தும்கூட, விசிக தொண்டர்களின் அதிருப்தியும் கோபமும் நீங்கவில்லை என்றே தெரிகிறது.

நேற்று விருத்தாசலம் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற பிரேமலதாவுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேரிடையாகவே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்..

நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி, நகர், இலங்கியனூர், வலசை, பிஞ்சனூர், சேப்பாக்கம், ஐவது குடி உள்ளிட்ட கிராமங்களில் பிரேமலதா பிரச்சார வேனில் சென்றபோது, எப்போதும் ஆக்ரோஷமாகப் பேசும் அவர், இன்று வழக்கத்திற்கு மாறாக மிகுந்த சோர்வுடனும் சுருக்கமாகவும் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நிலைமை மோசம்

அந்த பகுதியில் இருந்த விசிகவினர், அம்பேத்கர் சிலைக்குப் பிரேமலதா மாலை அணிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.. அதனை ஏற்று அவர் மாலை அணிவித்தபோது, அங்கிருந்த சிலர் "எங்கள் தலைவர் திருமாவளவனை நீங்கள் மதிக்கவில்லை" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற விசிக மண்டலச் செயலாளர் திராவிட மணி என்பவரிடம், விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் நீதிவள்ளல் உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த இடமே போர்க்களமானது. உடனே முன்னாள் மாவட்ட செயலாளரான நீதிவள்ளல் உள்ளிட்டோர் திராவிட மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பிலிருந்த போலீஸார் தலையிட்டு அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். தலைவர்கள் சமாதானம் பேசினாலும், களத்தில் விசிக தொண்டர்களின் வேகம் பிரேமலதாவிற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+