ஒரு மாதமாக விலை உயரவில்லை; இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாக உயரவில்லை. 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டே விலை உயரவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மக்களை பாதித்த விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள், மக்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மாதமாக விலை உயரவில்லை
கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை அதன்பின்னர் விலை உயராமல் அப்படியே நின்றது. இன்று வரை ஒரு மாதத்திற்கும் மேலாக விலை அதிகரிக்கவில்லை. அதற்கு மாறாக 2 முறை விலை குறைக்கப்பட்டது. மேலும் சமையல் சிலிண்டர் விலையும் ரூ.10 குறைக்கபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரணம் என்ன?
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடப்பதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். . விலை குறைப்புக்கு தேர்தல்தான் காரணம் என்றும் சிலர் வெளிப்படையாகவே கருத்துக்கள் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கு விற்பனை செய்யப்பட்டது.. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் விலையில் மாற்றமில்லை
இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications