வெளிய சொன்னா அவ்ளோதான்! ஆபாச மெசேஜ்..நிர்வாண செல்ஃபி! திருச்சபையில் திருட்டு வேலை பார்த்த பாதிரியார்!
சென்னை : சென்னையில் நிர்வாண செல்பி ஆபாச மெசேஜ் என திருச்சபைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் தொடர்பாக பாதிரியாரும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது.
தெரியாத நபர்களைத் தாண்டி நன்கு பழகிய குடும்பத்தினர், ஆசிரியர்கள், மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாதிரியார் அத்துமீறல்
இந்த நிலையில் சென்னையில் திருச்சபைக்கு வந்த சிறுமியிடம் பாதிரியார் அத்துமீறலில் ஈடுபட்டு கைதாகி இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ஷெர்ரார்டு மனோகர் என்பவர் கிறிஸ்தவ திருச்சபை ஒன்றினை நடத்தி வருகிறார். வாரத்தின் அனைத்து நாட்களிலும் அவரது திருச்சபையில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட மனோகரின் திருச்சபையில் அதிக அளவில் ஊழியர்கள் திரண்டு ஜெபம் நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

16 வயது சிறுமி
அந்த வகையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 16 வயது மகள் மனோகர் நடத்தி வரும் திருச்சபைக்கு ஜெபம் நடத்த அடிக்கடி வந்துள்ளார். இதை அடுத்து அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்து இருக்கிறார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இது குறித்து வெளியே சொன்னால் பெரிய அளவில் பிரச்சினையாகிவிடும் என அந்த பாதிரியார் மிரட்டி இருக்கிறார். இதனால் அந்த சிறுமி பயந்து போய் தனது வீட்டில் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

நிர்வாண செல்ஃபி
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாதிரியார் மனோகர், கடந்த ஆறு மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததோடு அந்த சிறுமியின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச படங்களையும் தனது நிர்வாண செல்ஃபிக்களையும் அனுப்பி வந்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கின்றனர். பாதிரியார் மனோகரின் இந்த கொடூர செயலுக்கு அவரது மனைவியான ஹெலன் கார் ஓட்டுநரான ஜீவ ஜேக்கப் வீட்டின் வேலைக்கார பெண்மணியான விஜயலட்சுமி ஆகியோரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

அதிரடி கைது
இந்த கொடுமை தொடர்ந்து அரங்கேறி வந்த நிலையில் வீட்டில் சொல்ல முடியாமல் சிறுமி தவிர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவது குறித்து அந்த திருச்சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அவரது வீட்டில் தெரிவித்து இருக்கிறார். இதை அடுத்து சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து விவரித்து இருக்கிறார் . தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் மனோகர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தனர் . இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பாதிரியார் மனோகர், மனைவி ஹெலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications