பொங்கலுக்கு முன் அதிமுகவிற்கு.. போகி வைக்க போகும் மோடி? கரும்பாக பிழிய போறாங்க! கசிந்த டாப் சீக்ரெட்
சென்னை: ஜனவரி மாதம் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க போவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன.2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி திருச்சி வருகிறார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.

மோடி சந்திப்பு: இந்த பயணத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளாராம். இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணி பற்றி முடிவு எடுக்கும். அதிமுக கூட்டணி முறிந்தாலும் திமுகவை தங்கள் பக்கம் இழுக்கலாம், இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை தங்கள் பக்கம் கொண்டு வரலாம்.
அப்படி செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் கால் வைக்கலாம் என்ற கணக்கை டெல்லி போட்டது. ஆனால் எத்தனை ரெய்டு நடந்தும், கைதுகள் நடந்தும் கூட திமுக - பாஜக இடையே உறவு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் அதிமுகவுடன் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பே கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்பதால்.. பாஜக இதில் தெளிவாக இருக்கிறதாம். பிரதமர் மோடியின் இந்த தமிழ்நாடு பயணத்திலேயே கூட்டணியை பற்றி இறுதி முடிவு எடுக்க போகிறார்களாம்.
கரும்பாக பிழிய போறாங்க: ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்னால்.. பிரச்சனை இல்லை. ஆனால் அதிமுக மட்டும் கூட்டணி வேண்டாம்.. நாங்கள் தனியாகவே போட்டியிடுகிறோம் என்று கூறினால்.. அதிமுகவை கரும்பாக பிழியும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.
ரெய்டு இல்லாமல்.. அதிமுகவை இரண்டாக அல்லது பல பீஸாக பிரிக்கும் திட்டம் கூட டெல்லி வசம் உள்ளதாம். இரண்டு கட்சிகளில் ஒன்றை அழித்தால் தான் பாஜக வளரும்.. தென் மாவட்டங்களில் பாஜக வளர்ந்துவிட்டது. கூட்டணி வைத்தால் சிக்கல் இல்லை.. இல்லையென்றால் பொங்கலுக்கு முன் பாஜகவிற்கு போகி வைக்கும் திட்டம் டெல்லிக்கு இருக்கிறதாம்.
மோடி வருகை ஏன்?: திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி திருச்சி வருகிறார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.
திருச்சி விமானம் சேவை: திருச்சிக்கு தொடர்ந்து பல புதிய விமான சேவைகள் கிடைக்க தொடங்கி உள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த சேவை மூலம் 1 மணி நேரம் 15 நிமிடத்தில் பெங்களூருக்கு செல்ல முடியும்.
இரவு 12.15 மணிக்கு இந்த சேவை மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றரை மணிக்கு நள்ளிரவில் இந்த விமானம் பெங்களூரை அடையும். இது தினசரி சேவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கண்ணை மூடி திறக்கும் முன் பெங்களூருக்கு எளிதாக திருச்சியில் இருந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருச்சியில் இருந்து பெருநகரங்களுக்கு தற்போது பயணம் மிக எளிதாகி உள்ளது.
திருச்சி விமான நிலையம்: இப்படிப்பட்ட நிலையில்தான் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முன்புறம் கோவில் தோற்றத்திலும்.. பின் புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
தற்போது திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், நான்கு உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் இரண்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications