இருமொழி கொள்கையை ஏற்ற மோடிக்கு நன்றி.. ஆனால் கொஞ்சம் லேட்டு.. என்ன டிஆர்பி ராஜா இப்படி சொல்றாரே!
சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழ், ஆங்கிலம் மொழியில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதை மேற்கொள் காட்டிய திமுகவின் டிஆர்பி ராஜா, ‛‛இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பிரதமருக்கு நன்றி. ஆனாலும் நீங்கள் 3 மாதம் தாமதமாக ஏற்று கொண்டு உள்ளீர்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிறது. 'பிலவ' ஆண்டு விடைபெற்று புதிதாக 'சுபகிருது' புத்தாண்டு பிறந்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி
அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகளும் பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவு மூலம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் தனது பதிவில் மாவிலை தோரணம், அகல் விளக்குகள் இடம்பெற்ற படத்தை பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு. வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்'' என தமிழில் எழுதப்பட்ட படத்தை தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆங்கிலத்திலும் வாழ்த்து
இதேபோல் ஆங்கில மொழியிலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை குறிப்பிட்டு இருந்தார். இதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழி இந்தி எனவும், அனைத்து மாநில மக்களும் இந்தி கற்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறி வருகிறது. இதை கருத்தில் கொண்டு தான் மத்திய பாஜக அரசு மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வருவதாக கூறி தமிழகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் சமீபத்தில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி பேச வேண்டும் எனும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மோடிக்கு கேள்விகள்
இந்த சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளார். இதில் இந்தி மொழி இடம்பெறவில்லை. இதற்கு பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்தி மொழியில் வாழ்த்து எங்கே எனவும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
Recommended Video

இருமொழி கொள்கையை ஏற்ற பிரதமர்
இதற்கிடையே திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா மேற்கொள் காட்டி, ‛‛இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு பிரதமருக்கு நன்றி'' என தமிழில் குறிப்பிட்டு உள்ளதோடு, ‛‛ஆனாலும் நீங்கள் 3 மாதம் தாமதமாக ஏற்று கொண்டு உள்ளீர்கள்'' என ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளார். அதாவது திமுக இருமொழி கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக இருந்து வருகிறது. அதோடு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளதால் அதற்கு டிஆர்பி ராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த பதிவிக்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications