ரஜினி உடல்நலம் குறித்து லதாவிடம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி! விரைவில் குணமடைய வாழ்த்து
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து, லதாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 30ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று பகுதியில் ஏற்பட்ட திடீர் வலி காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, இதயத்திலிருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை அனுப்பும் தமனியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வலி ஏற்பட்டிருக்கிறது. இடுப்பு மற்றும் தொடையை இணைக்கும் பகுதியில் உள்ள தமனியில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

சிகிச்சை குறித்து மருத்துவமனை மருத்துவ இயக்குநா் டாக்டா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, "அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (செப்.30) அனுமதிக்கப்பட்ட நடிகா் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது; முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் சாய் சதீஷ், மகா தமனி வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினாா்.
இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு செய்யப்பட்டது. தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது. இரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அவரது மனைவி லதாவிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வயிலாக நலம் விசாரித்திருக்கிறார். ரஜினி விரைந்து பூரண குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications