தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக் கட்டணம் உயருகிறது? எத்தனை பள்ளிகள் விண்ணப்பம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு, தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவுக்கு மே 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் முடிவடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு 2025-26, 2026-27, 2027-28 ஆகிய அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் என்பது சரியான முறையில் இல்லாமல் இருந்து வந்தது. இது ஒழுங்குபடுத்தப்படாத முறையில் இருந்து வந்ததால், அரசுக்கு பல புகார்கள் வந்தது. இதையடுத்து கட்டணங்களை சீர்செய்ய ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அரசால் அமைக்கப்பட்டது.

கட்டணத்தை சீர்செய்வது என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள், அனைத்தும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழுவிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் பதவியில் இருந்து வருகிறார்.
இந்த குழுவானது, ஒரு பள்ளியின் வரவு செலவுக் கணக்குகளை வைத்து, அவர்களுக்கு கட்டண நிர்ணயம் செய்வர். அப்படி நிர்ணயம் செய்யப்படும் கட்டணம் அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன்பின்னர், மீண்டும் மறுவரையறை செய்து புதிய கட்டண வரம்புகளை குறிப்பிட்ட பள்ளி பெற வேண்டும்.
இந்த தகவல்கள் தமிழ்நாடு தனியார் பள்ளி கட்டணக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும். பெற்றோர்களுக்கு பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை பெறுவதாக சந்தேகம் எழுந்தால், நேரடியாக இந்த குழுவில் புகார் செய்யலாம்.
சென்னை வியாசர்பாடி டூ பாரிமுனை.. பேசின் பாலத்திற்கு விடிவு காலம் பிறக்கிறதா? அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் 12,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணய குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்கிறது. இது பள்ளிகளை பொறுத்து மாறுபடும். எல்லா பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில் கட்டணம் மாறாது. குறிப்பிட்ட பள்ளிகளுக்கு என்கிற அடிப்படையில் தான் மாறும். அதாவது சுமார் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் என்கிற எண்ணிக்கை அடிப்படையில் மாறும்.
அந்த வகையில், மூன்று ஆண்டுகள் முடிவடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு 2025-26, 2026-27, 2027-28 ஆகிய அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக கட்டண நிர்ணய குழுவிடம் ஏற்கனவே தனியார் பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன.
கட்டணம் நிர்யணம் செய்வதற்கு மே 15-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், இதுவரை விண்ணப்பிக்காத பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என்றும். பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் உள்ளிட்ட விபரங்களை தணிக்கை துறையிடம் இருந்து பெற்று சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்றத்தின் ஒய்வுப்பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு கூறியுள்ளது.
ஏற்கனவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட தனியார் பள்ளிகள் தங்களுக்கு கட்டண உயர்வு தேவையில்லை என்றால் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்றும், புதிதாக கட்டணத்தை உயர்த்த உள்ள பள்ளிகள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications