தலைவரோ அவரது குடும்பத்தினரோ யாரும் பேசவில்லை.. கஸ்தூரி போட்ட ட்வீட்டிற்கு ரஜினி பிஆர்ஓ பதிலடி!
சென்னை: ரஜினிகாந்தோ அவரது குடும்பத்தினரோ யாரும் நடிகை கஸ்தூரியை செல்போனில் அழைத்து பேசவில்லை என்றும் எந்தவிதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் கே அகமது தெரிவித்துள்ளார்.
உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? மருத்துவ பரிசோதனை என்றால் இந்தியாவில் இல்லாத மருத்துவமனையா?
அமெரிக்காவுக்கு சென்று சோதனை செய்ய வேண்டிய அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை, இதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும் என டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்விட்டர்
இதை கண்ட ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள். ஒருவரது உடல்நலன் சார்ந்த விஷயங்களில் தலையிடுவது ஒருவரின் பிரைவசி மீறலாகும் என கண்டித்திருந்தனர். மேலும் உங்களுக்கு ஏதேனும் உடல்நிலையில் பிரச்சினை இருந்தால் அதை இப்படி வெளிப்படையாக தெளிவுப்படுத்துவீர்களா என்றெல்லாம் கேட்டார்கள்.

ட்வீட்
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி நேற்றைய தினம் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி ! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! என தெரிவித்திருந்தார்.

சமூகவலைதளங்கள்
இதிலும் நெட்டிசன்கள் யார் அழைத்தார்கள், என்ன பேசினார்கள் என கஸ்தூரிக்கு ட்வீட் அனுப்பினர். ஆனால் அவரோ சொல்ல முடிந்ததை சொல்லிவிட்டேன் என தெரிவித்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அவரது உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை கஸ்தூரிதான் கேட்கிறார் என்றால் அவரது குடும்பத்தினர் ஏன் விளக்க வேண்டும் ? என சமூகவலைதளங்களில் விவாதித்து வந்தனர்.

ரியாஸ் கே அகமது
இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் கே அகமது ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்திவிட்டார். அவர் தனது ட்வீட்டில் தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம் என போட்டு ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோருக்கும் டேக் செய்து போட்டுள்ளார். இந்த ட்வீட்டை ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

கஸ்தூரி பதில் ட்வீட்
என்னை அழைத்து பேசியது கங்கை அமரன் அவர்கள். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை என பதில் ட்வீட் போட்டுள்ளார் கஸ்தூரி.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications