விட்டுக்கொடுக்கும் “பன்னீர்” விடாபிடியானதால் கடுப்பான எடப்பாடி.. இத்தனைக்கும் “ஆணிவேர்” அதுதானாம்
சென்னை: பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் ஒற்றுமையாக எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு முக்கிய காரணம் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்தான் என்ற கருத்து பரவலாக வெளிப்பட்டு வருகிறது.
சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய சமயத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்த மாஃபா.பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். தர்மயுத்தத்துக்கு பின் ஓ.பி.எஸ். சந்தித்த முதல் தோல்வி இது

ஓபிஎஸுக்கு பிடித்த டீலிங்
அதன்பின்னர், கட்சி உங்களுக்கு ஆட்சி எங்களுக்கு என்ற உடன்படிக்கையின்படி ஓ.பன்னீர்செல்வம் ஒரு வழியாக டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் ஒன்றுசேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸும் நியமிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் வேட்பாளர்
முதலமைச்சராக எடப்பாடியே தொடர துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். இப்படியே ஆட்சியை நிறைவு செய்துவிட 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற போட்டி எழுந்தது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேசினர். சில நாட்கள் ஊடகங்களில் இதுகுறித்த விவாதங்களும் கருத்து மோதல்களுமே செய்தியாகின. ஒரு வழியாக அந்த முறையும் விட்டுக்கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளாராக ஏற்று தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். இதிலும் எடப்பாடிக்கே வெற்றி கிடைத்தது.

எதிர்க்கட்சித் தலைவர்
2021 தேர்தலும் நடந்து முடிந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால், அதிமுகவில் தோல்வியை பொருட்படுத்தாமல் அதிகாரப் போட்டிக்கு ஆயத்தமாகினார் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர். இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் யார் என இருவருக்கும் போட்டி தலைதூக்கியது. இதிலும் எடப்பாடி கை ஓங்க வழக்கம்போல் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்து ஒருங்கிணைப்பாளராகவே தொடர்ந்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்
அதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் பெரியளவில் ஆளும் திமுக அரசுக்கு ஈடுகொடுத்து செயல்படாமல் இருந்த அதிமுகவில், அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான மோதல் வெடித்தது. எப்போது விட்டுக்கொடுத்து சென்ற பன்னீர்செல்வம் இம்முறை தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்தார். வேறு வழியின்றி முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று ஆர்.தர்மருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தது எடப்பாடி தரப்பு. தர்ம யுத்தத்துக்கு பின் ஓ.பி.எஸ். வெளிப்படையாக சாதித்தது இது ஒன்றுதான்.

எடப்பாடி அண்ட் கோவின் கோபம்
இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனென்றால் 2 இடங்களை சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமாருக்கோ அல்லது, சிவி சண்முகத்துடன், கொங்கு மண்டலத்தை சேர்ந்த வேறொருவருக்கோ வழங்கலாம் என்று எடப்பாடி தரப்பு முடிவெடுத்திருந்ததால். அதை ஓ.பன்னீர்செல்வம் தட்டிப்பரித்ததாலேயே அவரை கட்டம் கட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு தூக்கியதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற தனக்கு கிடைக்க வேண்டிய பதவிகளையே விட்டுக்கொடுத்த ஓபிஎஸ் தொண்டருக்கு எம்பி சீட் பெற்றுத்தருவதற்காக தனது இடத்தையும் இழக்கும் நிலைக்கு சென்றுவிட்டாரே என்று குமுறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications