Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதி ரூ.19,000! குஷ்பூ ரூ.18,000! யாருக்கு வரும் இந்த மனசு? ரகசியம் பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்விக்காக யார் உதவி கேட்டுச் சென்றாலும் இல்லை என்று சொல்லாதவர் நடிகை குஷ்பு என பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒரு முறை தனது பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்த 2 ஏழை மாணவர்களுக்கு குஷ்பு வெளியில் சொல்லாமல் தலா ரூ.18,000 கட்டணம் செலுத்தியதாகவும் இதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு உதயநிதி ஸ்டாலின் விளம்பரமில்லாமல் ரூ.19,000 கட்டணம் க கட்டியதாகவும் ராஜன் பேசினார்.

சென்னையில் நடைபெற்ற புது திரைப்படம் ஒன்றின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த ரகசியத்தை பகிர்ந்தார் தயாரிப்பாளர் ராஜன்.

குஷ்புவின் கருணை

குஷ்புவின் கருணை

சென்னையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில், குஷ்புவை தங்கச்சி என வாய் நிறைய அழைத்த சினிமா தயாரிப்பாளர் ராஜன், அவரது உதவும் குணத்தை பற்றி மிகவும் பெருமையாக பேசினார். குஷ்புவிடம் கல்விக் கட்டணத்திற்காக உதவி கேட்டு யார் சென்றாலும் அவர் அவர்களை வெறுங்கையோடு அனுப்பியதே கிடையாது என்றும் கல்விக்காக தாராளமாக உதவக்கூடியவர் குஷ்பு எனவும் புகழாரம் சூட்டினார் ராஜன். சென்னை வண்ணாரப்பேட்டையில் தாம் நடத்தி வரும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.18,000 குஷ்பு கட்டணம் கட்டியதை நினைவுகூர்ந்தார் ராஜன்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இப்படி வெளியே தெரியாமல் ஆண்டுதோறும் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு குஷ்பு ஏராளமான உதவிகள் செய்வதாக தெரிவித்தார். இதேபோல் உதயநிதி ஸ்டாலினும் அறக்கட்டளை மூலம் விளம்பரம் இல்லாமல் கல்வி உதவிகளை வழங்கி வருவதாக தயாரிப்பாளர் ராஜன் கூறினார். தனது பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்த ஏழை மாணவர் ஒருவருக்கு உதயநிதி ரூ.19,000 கல்விக் கட்டணம் கட்டியதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ராஜன் .

குஷ்பு உருக்கம்

குஷ்பு உருக்கம்

முன்னதாக பேசிய நடிகை குஷ்பு, குடும்ப சூழல் காரணமாக தன்னால் படிக்க முடியாமல் போய்விட்டதாகவும் தன்னை போன்ற ஒரு நிலை யாருக்கும் வரக் கூடாது என்ற நோக்கத்தில் தான் கல்விக்காக யார் உதவி கேட்டாலும் தட்டாமல் செய்து வருவதாக விளக்கம் அளித்தார். தந்தை இல்லாமல் தாயின் ஆதரவில் வளரும் பிள்ளைகள் நன்கு படித்து சமுதாயத்தில் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என தாம் விரும்புவதாக கூறினார். இதனால் தான் கல்வி உதவித் தொகையை பொறுத்தவரை சாதி, மதம், கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் வழங்கி வருவதாக குஷ்பு பேசினார்.

ஏழை மாணவர்கள்

ஏழை மாணவர்கள்

குஷ்பு கல்விக்காக ஆண்டுதோறும் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்கிறார் என்ற தகவலே இதுவரை யாருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குஷ்புவின் உதவும் மனப்பான்மை பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார் சினிமா தயாரிப்பாளர் ராஜன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+